Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Maname Avan Vazhum
Ilaiyaraaja
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
தலைவன் திருப்பாதம் போற்றி
தலைவன் திருப்பாதம் போற்றி
இறைவன் திருநாமம் போற்றி
இறைவன் திருநாமம் போற்றி
யாவும் நலமாக எதுவும் வசமாக
யாவும் நலமாக எதுவும் வசமாக
மேவும் வினை தீர மேன்மை நிலை சேர
மேவும் வினை தீர மேன்மை நிலை சேர
தலைவன் திருப்பாதம் போற்றி
மனமே அவன் வாழும் கோயில்
ஓம்
சிவனே அதில் வாழும் தெய்வம்
ஓம்
பூக்கள் தினம் கொய்து
பூஜை பல செய்து
நான்கு மறை ஓதி
நாடும் அருள் ஜோதி
அழுதால் தொழுதால் வருவானோ
மனமே அவன் வாழும் கோயில்
ஓம்
சிவனே அதில் வாழ்வும் தெய்வம்
ஓம்
ஆன்மா திருக்கோயில் விளக்காக
அன்பே அதில் காணும் திரியாக
ஆர்வம் நெய்யாக இடுபவன் நான்
அதனால் ஆசைகள் விடுபவன் நான்
கடல் தனில் நதி சேரா நேரம் எது
சிவனுடன் சேராத ஜீவன் எது
அழுதால் தொழுதால் வருவானோ
மனமே அவன் வாழும் கோயில்
சிவனே அதில் வாழும் தெய்வம்
நானாய் பிறந்தேனா
நான் அறியேன்
நினைத்தால் இறப்பேனா
நான் அறியேன்
குறைகள் குறையாத மேனி இது
நிறைகள் அறியாத நெஞ்சம் இது
மறை பொருள்தனைக் காண துடிக்கிறதே
இரு விழி கண்ணீரை வடிக்கிறதே
அழுதால் தொழுதால் வருவானோ
மனமே அவன் வாழும் கோயில்
ஓம்
சிவனே அதில் வாழும் தெய்வம்
ஓம்
பூக்கள் தினம் கொய்து
பூஜை பல செய்து
நான்கு மறை ஓதி
நாடும் அருள் ஜோதி
அழுதால் தொழுதால் வருவானோ
மனமே அவன் வாழும் கோயில்
சிவனே அதில் வாழும் தெய்வம்