Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sevakkaattu Seemaiellaam - From "Nenjuku Needhi"
Dhibu Ninan Thomas
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஆ-அரிச்சந்திரர் மாமன்னர் ஆட்சியில் நடந்ததென்னவோ
சத்தியமே சோதனையாய் சரிந்து கீழே விழுந்ததென்னவோ
சகத்தோரே உணர்ந்திடுவீர் சகலரும் வந்து சேரும்
இடுகாட்டு மத்தியிலே இருக்கின்றதோ
அய்யோ எங்கே தேடுவேன்
ஏறாத மலை ஏறி இறங்காத கடல் இறங்கி
வடிக்காத கண்ணீர் விட்டு ஓடினேன் தேடினேன்
ஓடினேன் கண்ணே மணியே
என்று உன்னை நாடுவேன்-ஹ்-ஹ்-ஹ்-ஹ்-ஹ்
செவக்காட்டு சீமை எல்லாம்
ஆண்டாரே அரிச்சந்திர ராசா
அரசாண்ட நாட்ட விட்டே
நகந்தாரே செல்லாக் காசா
பொட்ட காட்டு புழுதி போல
பொக பொகையா போனாரே
எல்லாத்தையும் இழந்த பொறவு
ஈமக்காட்ட சேந்தாரே
செவக்காட்டு சீமை எல்லாம்
ஆண்டாரே அரிச்சந்திர ராசா
பட்டாட குப்பையிலே பல்லக்குமே வீதியிலே
எட்டூரு சுத்தி வந்தோம் பட்டினிக்கு சோறு இல்லே
கண் போக காட்சி இல்லே கால் போக ஊரும் இல்லே
மண்ணாகி போன பின்னே மானிடர்க்கு சாதி இல்லே
பஞ்சாங்க நூலு தான் பள்ளம் தோண்டுதே
அன்னாடங்க் காச்சிய குத்தி சாய்க்குதே
கொட்டுற தெய்வம் கூரைய பிச்சி கொட்டுன்னு தானே சொன்னாங்க
கூரையும் இல்லா வீட்டுல வாழும் எங்கள எதுக்கு கொன்னாங்க
செவக்காட்டு சீமை எல்லாம்
ஆண்டாரே அரிச்சந்திர ராசா
மும்மாரி பெய்யுதுங்க மூணு போகம் வெளையுதுங்க
ஒப்பாரி வைக்கும் ஜனம் ஒசர வழி தெரியலங்க
ஹ்-ஹ்-ஹ்-ஹ்-ஹ்-ஹ்
முள்ளோடு பூவிருக்கு முத்தத்தில நிலவிருக்கு
கல்லான கடவுளுக்கே கருணை அது எங்கிருக்கு
கற்பூரம் ஏத்தியும் கண்ண காட்டலே
நெய் சோற போட்டுமே மண்ணக் காக்கல
பொய்யில உண்மை பொசுங்கி போக எத்தன சட்டம் அம்மாடி
நீதிய காசுக்கு வாங்குற மனுசன் நிக்கிறான் பாரு முன்னாடி
செவக்காட்டு சீமை எல்லாம் (சீமை எல்லாம்)
ஆண்டாரே அரிச்சந்திர ராசா (அரிச்சந்திர ராசா)
அரசாண்ட நாட்ட விட்டே (நாட்ட விட்டே)
நகந்தாரே செல்லாக் காசா
பொட்ட காட்டு புழுதி போல
பொக பொகையா போனாரே
எல்லாத்தையும் இழந்த பொறவு
ஈமக்காட்ட சேந்தாரே
அரிச்சந்திர ராசா
ஆ-அ-ஆ-அ-ஆ-ஆ
ஓ-ஒ-ஓ-ஒ
தந்தானே-நா
ஆ-அ-ஆ-அ-ஆ-ஆ
ஓ-ஒ-ஓ-ஒ
தந்தானே-நா