Skip to content

Mullai Malar Mele

T.M. Soundararajan
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

பெ: முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே ஆ: வெள்ளியலை மேலே துள்ளும் கயல் போலே வெள்ளியலை மேலே துள்ளும் கயல் போலே அள்ளி விழி தாவக் கண்டேன் என் மேலே பெ: முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே பெ: வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே வெண்ணிலவை பூமியின் மேலே புன்னகையாலே கண்ணெதிரில் காணுகின்றேன் பிரேமையினாலே ஆ: மின்னல் உருமாறி மண்மேலே கன்னியைப் போலே மின்னல் உருமாறி மண்மேலே கன்னியைப் போலே அன்ன நடை பயிலக் கண்டேன் ஆசையினாலே ஆ ...ஆ... ஆ... முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே பெ: விந்தை மிகும் மகுடி முன்னாலே நாகத்தைப் போலே விந்தை மிகும் மகுடி முன்னாலே நாகத்தைப் போலே எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே ஆ: சிந்தை நிலை மாறினதாலே எந்தன் முன்னாலே செம்பவளம் நெருங்கக் கண்டேன் என் மனம் போலே பெ: ஆ... ஆ ...ஆ... ஆ/பெ: முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே படம்: உத்தமபுத்திரன் (1958) இசை: ராமநாதன் வரிகள்: டி.கே.சுந்தர வடையார் பாடகர்கள்: டி.எம்.செளந்தராஜன், பி.சுசீலா