Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Nilladhey Nilladhey
Sathyaprakash
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
நில்லாதே நில்லாதே
வெற்றி தோல்வி ரெண்டும் ஒன்று
நில்லாதே நில்லாதே
நேற்று ஒன்று இல்லை இன்று
உன் நெஞ்சமே உன் போர்க்களம்
உன் வீரமே உன் ஆயுதம்
உன்னுள் அச்சங்கள் கோடி நீக்க போராடு
உன்னுள் ஐயங்கள் யாவும் போக்க போராடு
கோபம் இரக்கம் ரெண்டும் ஆள போராடு
வேகம் நிதானம் ரெண்டும் ஆள போராடு
நீயே நீயே உனதொரு தடையாய்
நீயே நீயே உடைத்திடும் படையாய்
நீயே நீயே உனக்கொரு எதிரி
நீயே நீயே உனக்கொரு புலறி
உன் நெஞ்சமே உன் போர்க்களம்
உன் வீரமே உன் ஆயுதம்
நில்லாதே நில்லாதே
வெற்றி தோல்வி ரெண்டும் ஒன்று
நில்லாதே நில்லாதே
நேற்று ஒன்று இல்லை இன்று
நீ சிந்தும் துளியினிலே ஆழி மூழ்க
உன் பார்வை ஒளியினிலே பாதை நீள்க
நீ செல்லும் வழியினிலே
பூக்கள் வீழ்க நீள் வான
வெளியெனவே நீயும் வாழ்க
ஒவ்வோர் இரவிலும் இறந்திடு இறந்திடு
புத்தம் புதிதென தினம் தினம் பிறந்திடு
உந்தன் மமதைகள் எரித்திடு பணிந்திடு
உந்தன் குறைகளை புகழ் என அணிந்திடு
வாழும் மனிதனின் முடிவேது முடிவேது
முயற்சியை நிறுத்திடும் நிமிடம் அது அது
உந்தன் தலையினில் ஏற போகுது
எதிரிகள் அணிவிக்கும் மகுடம் அது அது
உன் நெஞ்சமே உன் போர்க்களம்
உன் வீரமே உன் ஆயுதம்
நில்லாதே நில்லாதே
வெற்றி தோல்வி ரெண்டும் ஒன்று
நில்லாதே நில்லாதே
நேற்று ஒன்று இல்லை இன்று