Skip to content

Thirupparankundrathil

Mahanadhi Shobana
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

திருபரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணிமலை மீது எதிரொலிக்கும் திருச்செந்தூரிலே மேலாடும் உன் திருப்புகழ் பாடியே கடலாடும் திருபரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணிமலை மீது எதிரொலிக்கும் பழமேலே இருக்கும் கந்த பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்பு பழம் பழமேலே இருக்கும் கந்த பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்பு பழம் பழமுதுச் சோலையில் முதிர்ந்த பழம் பக்தி பசியோடு வருவோர்க்கு ஞான பழம் பக்தி பசியோடு வருவோர்க்கு ஞான பழம் திருபரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணிமலை மீது எதிரொலிக்கும் சிறப்புடனே கந்த கோட்டமுண்டு உன் சிங்கார மயிலாடத் தோட்டமுண்டு சிறப்புடனே கந்த கோட்டமுண்டு உன் சிங்கார மயிலாடத் தோட்டமுண்டு உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை அங்கு உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை அங்கு உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை திருபரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணிமலை மீது எதிரொலிக்கும் திருச்செந்தூரிலே மேலாடும் உன் திருப்புகழ் பாடியே கடலாடும் திருபரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணிமலை மீது எதிரொலிக்கும்