Karunai Ullam Kondavale
L. R. Eswari
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா அம்மா
கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா
உன் கடைக் கண்ணால் நலம் கொடுப்பாய் அருள் மாரியம்மா
அருள் மாரியம்மா - அம்மா
கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா
கரகம் எடுத்து ஆடி வந்தோம்
காணிக்கை செலுத்த நாடி வந்தோம்
கரகம் எடுத்து ஆடி வந்தோம்
காணிக்கை செலுத்த நாடி வந்தோம்
கரங்கள் குவித்து பாடி வந்தோம்
வரங்கள் குறித்து தேடி வந்தோம் - அம்மா
கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா
குத்து விளக்கை ஏற்றி நின்றோம்
எங்கள் குல விளக்கை போற்றி நின்றோம்
குத்து விளக்கை ஏற்றி நின்றோம்
எங்கள் குல விளக்கை போற்றி நின்றோம்
முத்துமாரி உனை பணிந்தோம்
பக்தி கொண்டோம் பலன் அடைந்தோம் - அம்மா
கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா
அன்ன வாகனம் அமர்ந்து வந்தாய்
அன்ன வாகனம் அமர்ந்து வந்தாய்
அம்மா எங்களுக்கருள வந்தாய்
அன்ன வாகனம் அமர்ந்து வந்தாய்
அம்மா எங்களுக் கருள வந்தாய்
புன்னகை முகம் கொண்டவளே
பொன்மலர் பாதம் தந்தவளே - அம்மா
கருணை உள்ளம் கொண்டவளே கருமாரியம்மா