Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Aasai Mugam
Sudha Ragunathan
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
ஆசை முகம் மறந்து போச்சே
இதை யாரிடம் சொல்வேனடி தோழி?
ஆசை முகம் மறந்து போச்சே
இதை யாரிடம் சொல்வேனடி தோழி?
நேசம் மறக்கவில்லை நெஞ்சம்
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில்
நினைவு முகம் மறக்கலாமோ?
நினைவு முகம் மறக்கலாமோ?
ஆசை முகம் மறந்து போச்சே
இதை யாரிடம் சொல்வேனடி தோழி?
கண்ணில் தெரியுதொரு தோற்றம்
அதில் கண்ணனழகு முழுதில்லை
கண்ணில் தெரியுதொரு தோற்றம்
அதில் கண்ணனழகு முழுதில்லை
நன்னு முகவடிவு கானில்
அந்த நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்
நன்னு முகவடிவு கானில்
அந்த நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்
ஆசை முகம் மறந்து போச்சே
யாரிடம் சொல்வேனடி தோழி?
தேனை மறந்திருக்கும் வண்டும்
தேனை மறந்திருக்கும் வண்டும்
ஒளிச் சிறப்பை மறந்துவிட்ட பூவும்
தேனை மறந்திருக்கும் வண்டும்
ஒளிச் சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும்
வானை மறந்திருக்கும் பயிரும்
இந்த வையம் முழுதுமில்லை தோழி
வானை மறந்திருக்கும் பயிரும்
இந்த வையம் முழுதுமில்லை தோழி
ஆசை முகம் மறந்து போச்சே
ஆசை முகம் மறந்து போச்சே
இதை யாரிடம் சொல்வேனடி தோழி?
கண்ணன் முகம் மறந்துபோனால்
கண்ணன் முகம் மறந்துபோனால்
இந்த கண்களிருந்து பயனுண்டோ?
கண்ணன் முகம் மறந்துபோனால்
இந்த கண்களிருந்து பயனுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய்
இனி வாழும் வழியென்னடி தோழி?
வண்ணப் படமுமில்லை கண்டாய்
இனி வாழும் வழியென்னடி தோழி?
ஆசை முகம் மறந்து போச்சே
இதை யாரிடம் சொல்வேனடி தோழி?
ஆசை முகம் மறந்து போச்சே
இதை யாரிடம் சொல்வேனடி தோழி?
நேசம் மறக்கவில்லை நெஞ்சம்
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் எனில்
நினைவு முகம் மறக்கலாமோ?
ஆசை முகம் மறந்து போச்சே
இதை யாரிடம் சொல்வேனடி தோழி?