Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ennuyire
Dhilip Varman
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
என்னுயிரே என்னைப் பிரிந்தவளே
இளநெஞ்ச கீதமாகும் இசையே
என்னவளே என்னில் நிறைந்தவளே
இதமாக வீசும் தென்றல் நீயே
தூரமாகப் போனதே காதல் மேகமே
பாரமான என் மனம் உன்னைத் தேடுதே
உன் பார்வை சொல்லும் நூறு
ஆறுதல் தேடி வாழ்கிறேன்
என்னுயிரே என்னைப் பிரிந்தவளே
இளநெஞ்ச கீதமாகும் இசையே
காதல் என்ற கவிதையை தந்த தேவதை
காலமென்ற அருவியில் அன்றே மூழ்கியதோ
கால் தடங்கள் தெரியுதே வந்த பாதையில்
நீயிருந்த சுவடுகள் நெஞ்சில் மறைந்திடுமா
வா எந்தன் காதலே
வா இந்த நொடியிலே
என்னில் வாழும் பெண்ணே
கொஞ்சம் கண்ணில் தோன்ற வா
என்னுயிரே என்னைப் பிரிந்தவளே
இளநெஞ்ச கீதமாகும் இசையே
ஈரமான இரவிலே உன்னைத் தேடினேன்
தேன் உறைந்த உதடுகள் என்னை அடைந்திடுமா
வெண்ணிலாவின் ஒளியிலே உன்னைத் தீண்டினேன்
பூவாய் உந்தன் விரல்களே என்னைத் தழுவிடுமா
ஏன் இந்த சூழ்நிலை
ஏன் இந்த வேதனை
என்னில் வாழும் பெண்ணே
கொஞ்சம் கண்ணில் தோன்ற வா
என்னுயிரே என்னைப் பிரிந்தவளே
இளநெஞ்ச கீதமாகும் இசையே
தூரமாகப் போனதே காதல் மேகமே
பாரமான என் மனம் உன்னைத் தேடுதே
உன் பார்வை சொல்லும் நூறு
ஆறுதல் தேடி வாழ்கிறேன்
என்னுயிரே என்னைப் பிரிந்தவளே
இளநெஞ்ச கீதமாகும் இசையே
Lyrics By: GS