Ela Machi Machi
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
குழு: ...
ஆண்: ஏலே மச்சி மச்சி
தல சுத்தி சுத்தி உன் புத்தி
கெட்டு போயாச்சு
ஆண்: என் மூளைக்குள்ள
பல பட்டாம் பூச்சி எட்டி
எட்டி பாக்குது என்னாச்சு
ஆண்: அட டாலர் போல
போத ஏறி போச்சு நம்ம
ரூபா போல புத்தி இறங்கி
போச்சு போத ஏறினால்
ஆண்: கொஞ்சம் ஞானம்
பொறக்குது போத தெளிஞ்சதும்
வந்த ஞானம் பறக்குது
ஆண்: ஏலே மச்சி மச்சி
தல சுத்தி சுத்தி உன் புத்தி
கெட்டு போயாச்சு
விஷ்லிங்: ...
குழு: டோரா
ஆண்: ஏதாச்சு போதை
ஒன்னு எப்போதும் தேவை
கண்ணா இல்லாட்டி மனுஷனுக்கு
சக்தி இல்ல
ஆண்: தாய் பாலும் போத
தரும் சாராயம் போத தரும்
இரண்டையும் பிரித்தது என்
புத்திஇல்ல
ஆண்: தாய் பாலின் போதை
சில மாதம் மட்டும் சாராய
போதை நாம் வாழும் மட்டும்
ஆண்: போதை மாறலாம்
உன் புத்தி மாறுமா புத்தர்
சொல்லியும் நாய் வாலு
நிமிருமா
ஆண்: ஏலே மச்சி மச்சி
தல சுத்தி சுத்தி உன் புத்தி
கெட்டு போயாச்சு ஹாஹா
ஹாஹா
குழு: ...
ஆண்: வாழ்க்கை புதையலப்பா
வலுத்தவன் எடுத்துகப்பா அவன்
அவன் வயித்துக்குதான் வாழ்வது
தப்பா
ஆண்: அடுத்தவன் வயித்துக்குள்ள
உன் உணவு இல்லையப்பா
இளைச்சவன் பசித்திருந்தால்
இந்த மண்ணு தாங்காதப்பா
ஆண்: நீ வாதத்துக்கு ரொம்ப
கெட்டிகாரன் அட வக்கீலுக்கு
நீ சொந்தக்காரன் சொல்லும்
வார்த்தையில் என்ன சொக்க
வைக்கிற
ஆண்: இமய மலையில
வந்து ஐஸ் விக்கிற
ஆண்: ஏலே மச்சி மச்சி தல
சுத்தி சுத்தி உன் புத்தி கெட்டு
போயாச்சு
ஆண்: என் மூளைக்குள்ள
பல பட்டாம் பூச்சி எட்டி
எட்டி பாக்குது என்னாச்சு