Maalai Pon Maalai
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
மாலை, பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம் மகரந்தம் வான் தூவுதே
மாலை, பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம் மகரந்தம் வான் தூவுதே
மடிமீது உனை வைத்து மார்போடு அணைப்பேனே
இமை மூடும் இரவினிலே, அடியே
பால் வீதி பயண வழி நம் தேடல் நடக்குதடி
வின்மீன்கள் வெளிச்சத்திலே, அடியே
நதிமீதினிலே பல கோடி நிலா ஓ நீள்கிறதே கனவே
மாலை, பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம் மகரந்தம் வான் தூவுதே
மாலை, பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம் மகரந்தம் வான் தூவுதே
தோளிலே சாயும் உயரத்தில் நீயும் இருப்பது பொருத்தமே
உதட்டிலே உதடு உரசிடும்போது உயிரிலே அழுத்தமே
உள் நாக்கிலே தேன்துளி நீ, உன் தோளிலே கொடிமல்லி நான்
சொட்டு சொட்டாய் மழைதுளி நீ, வெட்டவெளி ஒற்றை பூ நான்
என் ஜன்னல் வானிலே சட்டென்று திறக்குதே
பொன்வேளி நடுவிலே மொட்டொன்று மலருதே
தானே-நானே
தானே-நானே
மாலை, பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம் மகரந்தம் வான் தூவுதே
ஓ விரல்களில் தவழும் கோப்பையில் நிரம்பும் விலை இல்லா wine இவள்
இருளிலே எரியும் மெழுகினை போல அழகிய ஒளி இவள்
கன்னம் சேர்த்து கைகள் கோர்த்து வட்ட நிலா வானம் பார்த்து
ஒன்றாகுதே கண்கள் நான்கு ஒற்றை கனா காணும்போது
ஒரு போர்வை கூடத்தில் நாம் சேர்ந்தே வாசிக்கலாம்
சிறு வேர்வை பூக்களிள் மலர் தோட்டம் விதைக்கலாம்