Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Machaan Machaan-StarMusiQ.Com
Bela Shende
,
Ilaiyaraaja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
மச்சான் மச்சான் உன் மேல ஆச வச்சான்
வச்சு தச்சான் தச்சான் உசுரோடு உன்னை தச்சான்
மச்சான் மச்சான் என் மேல ஆச வச்சான்
வச்சு தச்சான் தச்சான் உசுரோடு என்னை தச்சான்
ஏழேழு ஜென்மந்தான் எடுத்தாலும் எப்போதும்
நெஞ்சுக்குள்ள உன்ன சொமப்பேனே
தாயாகி சில நேரம்
சேயாகி சில நேரம்
மடிமேல உன்னை சொமப்பேனே
சந்தோஷத்தில் என்னை மறப்பேனே ஓ
கொன்னுப்புட்ட... கொன்னுப்புட்ட...
கொன்னுப்புட்ட, கொன்னுப்புட்ட நெஞ்சுக்குள்ள
கொன்னுப்புட்ட... கொன்னுப்புட்ட...
வந்துபுட்டேன், தந்துபுட்டேன் என்னை உனக்குதான்
மச்சான் மச்சான் உன் மேல ஆச வச்சான்
வச்சு தச்சான் தச்சான் உசுரோடு உன்னை தச்சான்
சொல்ல வந்த வார்த்தை சொன்ன வார்த்தை சொல்லப்போகும்
வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்குதே
என்னை என்ன கேட்டு என்ன சொன்ன என்ன ஆனேன்
இந்த மயக்கம் எங்கோ இழுக்குதே
பெண்ணே உந்தன் கொலுசு எந்தன் மனச மாட்டிப்போகுதே
போகும் வழி எங்கும் வருவேனே
உன் பேரைத்தான் சொல்லிதினம் தாவணியப் போட்டேனே
உசுரத்தான் விட்டாக்கூட உன்னைவிட மாட்டேனே
மானே... அடி மானே...
கொன்னுப்புட்ட... கொன்னுப்புட்ட...
கொன்னுப்புட்ட, கொன்னுப்புட்ட நெஞ்சுக்குள்ள
கொன்னுப்புட்ட... கொன்னுப்புட்ட...
வந்துபுட்டேன், தந்துபுட்டேன் என்னை உனக்குதான்
மச்சான் மச்சான் உன் மேல ஆச வச்சான்
வச்சு தச்சான் தச்சான் உசுரோடு உன்னை தச்சான்
ஆசைவச்ச நெஞ்சு இலவம் பஞ்சுப்போலத் தானே
உன்னத்தேடி நாளும் பறக்குமே
அம்மிக்கல்லு மேல கால வச்சு மெட்டிப்போடும்
அந்த நாளை மனசும் நெனைக்குமே
கண்ணைமூடிப் பாத்தா எங்கும் நீ தான் வந்து போகிற
உடல் பொருள் ஆவி நீ தானே
என்ன வேணும் என்ன வேணும் சொல்லிப்புடு ராசாவே
உன்னப்போலப் பொட்டப்புள்ள பெத்துக்குடு ரோசாவே
தேனே... வந்தேனே...