Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ennaalume Thuthippaai
Jikki, T. A. Kalyanam
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
எந்நாளுமே துதிப்பாய் என் ஆத்துமாவே, நீ
எந்நாளுமே துதிப்பாய்
இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவும் மறவாது
எந்நாளுமே துதிப்பாய்
பாவங்கள் எத்தனையோ,நினையா திருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ?
பாழான நோயை அகற்றி குணமாக்கி
பாழான நோயை அகற்றி குணமாக்கி
பாரினில் வைத்த மகா தயவை எண்ணி
எந்நாளுமே துதிப்பாய்
எத்தனையோ கிருபை, உன் உயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி,
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி,
நித்தியமதான ஜீவனை மீட்டதால்
எந்நாளுமே துதிப்பாய்
நன்மையாலுன் வாயை நிறைத்தாரே, பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை
உன்வயது கழுகைப்போல் பலம் கொண்டு,
உன்வயது கழுகைப்போல் பலம் கொண்டு,
ஓங்கு இளமை போலாகவே செய்ததால்
எந்நாளுமே துதிப்பாய்
மன்னிப்பு மாட்சிமையாம் மாதேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்
எண்ணுவாயோ கிழக்கு மேற்கு தூரமே?
எண்ணுவாயோ கிழக்கு மேற்கு தூரமே?
எல்லா உன் பாவம் அகன்ற தூரமே
எந்நாளுமே துதிப்பாய்
தந்தைதன் பிள்ளைகள்கு தயவோடிருந்தானோ
தந்தைதன் பிள்ளைகள்கு
எந்த வேளையும் அவரோடு தங்கினால்,
எந்த வேளையும் அவரோடு தங்கினால்,
ஏற்றிப் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே
எந்நாளுமே துதிப்பாய் என் ஆத்துமாவே, நீ
எந்நாளுமே துதிப்பாய்!