Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vaanavil
Andrea Jeremiah
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
உ-உ-உ-உ
வானவில் என் வாசலில்
காதிலே உன் ஓசைகள்
ஏதோ மாறுதல் இது உன்னாலே
காற்றிலே உன் வாசனை
என்றுமே உன் யோசனை
ஏதோ மாறுதல் இது உன்னாலே
கிளைகள் தாவும் குறும்பு வானரமே
உள்ளக் காட்டிலே உனக்காக ஏங்கினேன்
அணில் தேடும் மாம்பழம்
இது ஆசை காதல் நாடகம்
தேடினேன் தினம் தினம் அன்பே
கவிதை பாடவா காதல் பேசவா
காய்ந்திடும் வெண்ணிலவாய் உன்னை நேசித்தேனே
காதலா மாற்றம் தந்தாய் ஏனடா
என் காதலா என்னை பாரடா
என் காதலா கொஞ்சம் பாரடா
பாதையில் உன் கால்தடம் தூரமாய் கண்டேன் முகம்
காணும் காட்சிகள் வெறும் பொய் தானே
கூந்தலை உன் கைகளால் தீண்டிடும் பொன்னாள் வரை
வாழும் நாழிகை கொடுமை தானோ
சிணுங்கும் மேகம் பொழிந்த தூறலுடன்
பெண்மை பேசுதே குளிர் தென்றல் வீசுதே
எதற்காக தோன்றினாய் எனதுள்ளம் அள்ளி மூடினாய்
தேடினேன் தினம் தினம் அன்பே
கவிதை பாடவா காதல் பேசவா
காய்ந்திடும் வெண்ணிலவாய் உன்னை நேசித்தேனே
காதலா மாற்றம் தந்தாய் ஏனடா
என் காதலா என்னை பாரடா
என் காதலா கொஞ்சம் பாரடா
உ-உ-உ