Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Yennodu Vaa Vaa - MassTamilan.com
Karthik - MassTamilan.com
Popularity · Low
+
Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
என்னோட வா-வா என்று சொல்ல மாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
நீ என்னோட வா-வா என்று சொல்ல மாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
செல்லச் சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
அ-அ-அ, அன்பே என்னை தண்டிக்கவும் புன்னகையில் மன்னிக்கவும்
உனக்கு உரிமை இல்லையா?
என்னோட வா-வா என்று சொல்ல மாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோட வா-வா என்று
சொல்ல மாட்டேன், போக மாட்டேன்
கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்க
நீ சாய்வது என்னை கொஞ்சம் பார்க்கத்தானடி
கண்ணை மூடி தூங்குவதை போல்
நீ நடிப்பது எந்தன் குரல் கேட்கத்தானடி
இன்னும் என்ன சந்தேகம்
என்ன இனி எந்நாளும் தீயாக பார்காதடி
சின்னப் பிள்ளை போல நீ அடம்பிடிப்பதென்ன சொல்ல?
என்னைவிட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல
சண்டை போட்ட நாட்களைத்தான்
எண்ணிச் சொல்ல கேட்டுக்கொண்டால் கணக்கும் பயந்து நடுங்கும்
என்னோட வா-வா என்று சொல்ல மாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோட வா-வா என்று
சொல்ல மாட்டேன், போக மாட்டேன்
காதலுக்கு இலக்கணமே
தன்னால் வரும் சின்னச் சின்ன தலைகணமே
காதல் அதை பொறுக்கணுமே
இல்லையெனில் கட்டிவைத்து உதைக்கணுமே
உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே
என் நெஞ்சம் கொண்டாடுமே
கன்னத்தில் அடிக்கும் அடி முத்தத்தாலே வேண்டுமடி
மற்றதெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி
எந்த தேசம் போனபோதும்
என்னுடைய சொந்த தேசம் உனது இதயம்தானே
என்னோட வா-வா என்று சொல்ல மாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
செல்லச் சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
அ-அ-அ, அன்பே என்னை தண்டிக்கவும் புன்னகையில் மன்னிக்கவும்
உனக்கு உரிமை இல்லையா?
என்னோட வா-வா என்று சொல்ல மாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போக மாட்டேன்