Idayam Idam Mariyathe
A.R. Rahman, K.S. Chithra & Karthik
Popularity · Low
YouTube
Searching YouTube...
Lyrics
இதயம் இடம் மாறியதே
விழிகள் வழிமாறியதே
இதுதானே காதல் என்று
அசரீரி கேட்கின்றதே
இந்த பூமி முழுவதும்
அழகாய் மாறிப் போனதேனோ
என் வானின் மீது புதிதாய்
ஒரு மேகம் மிதப்பதேனோ
மனமே மனமே எதனாலே
இத்தனை உற்சாகம்
உனக்குள்ளே புதுவித தடுமாற்றம்
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ
மனமே மனமே எதனாலே
இத்தனை கொண்டாட்டம்
கண்ணுக்குள்ளே கனவுகள் குடியேற்றம்
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ
செஞ்சுரிய ஜோதியில்
சந்திரன் ஒளி சேர்ந்ததோ
அசைந்தாடும் ஆழியில்
அழகிய நதி கலந்ததோ
காலம் என்னும் நதியில்
விழுந்து இரவும் நகர்ந்தது
பகலும் நகர்ந்தது
இதயமும் நகர்ந்ததோ
இதயம் இடம் மாறியதே
விழிகள் வழிமாறியதே
இதுதானே காதல் என்று
அசரீரி கேட்கின்றதே
அலைபாயும் காதலே
அணையாத தீயா
வலித்தாலும் காதலே
இனிக்கின்ற நோயா
இசையோடு சேரும் தாளம்
சுதையோடு பாடும் ராகம்
அதைப்போலே எந்தன் நெஞ்சும்
உன்னைச் சேர்ந்ததே
உள்ளம் சாய்ந்ததே
காதலின் கால்தடம்
தந்ததும் தீயா
தந்ததும் தீயா
தீயைத் தொட்டு ரசித்தால்
வந்ததும் நீயா
எந்தன் கனவிலோர் பூந்தோட்டம்
பூக்கள் பூக்கும் பெண்ணே உன்னாலே
பூவின் வண்ணம் மட்டும் என் சொந்தம்
பூவின் வாசம் எல்லாமே
உன் சொந்தமே
புதுயுகமே பிறந்ததோ
பரிமாற்றம் நிகழ்ந்ததோ
இருதுருவம் இணைந்ததோ
இடைவெளிகள் தொலைந்ததோ
காலம் என்னும் நதியில்
விழுந்து இரவும் நகர்ந்தது
பகலும் நகர்ந்தது
இதயமும் நகர்ந்ததோ
இதயம் இடம் மாறியதே
விழிகள் வழிமாறியதே
இதுதானே காதல் என்று
அசரீரி கேட்கின்றதே
மனமே மனமே எதனாலே
இத்தனை உற்சாகம்
உனக்குள்ளே புதுவித தடுமாற்றம்
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ