Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Anjaathiru En Nenjame
D. G. S. Dhinakaran
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
YouTube
Searching YouTube...
Lyrics
Original
Translation
Bilingual
விண்ணுலகம் மன்னனாம் இயேசு
மண்ணுலகில் ஒரு ஏழையின் வீட்டில் எத்தனை நேரம் இருக்க இயலும்
அவர் எங்களை பிரியும் நேரமும் வந்து விடுமே
தாய் தன் கன்றை பிரிவது போல
அன்பு பார்வை ஒன்றை எங்கள் யாவர் மேலும் வீசி
பிரியா விடை பெறுவாய்
அந்த பார்வை
அன்று தம் சீடர்களிடமிருந்து அவர் விடை பெரும் பொழுது
அவர்களுக்கு கொடுத்த அவருடைய வாக்குகளையே எங்களுக்கும்
நினைவு படுத்தும்
நான் உங்களை திக்கற்றோர்களாக விடேன்
உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும்
நான் உங்களுடனே கூட இருக்கிறேன்
உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக
நான் திரும்பி உங்கள் இடத்திற்கு வருவேன்
என்ற இந்த வாக்கு தற்றங்கள் எத்தனை இனிமையானவைகள்
ஆம் உலகத்தின் முடிவு பரியந்தம் இயேசு
ஆன்மீகமாக நம்மோடு இருப்பார் இருக்கப்போகிறார்
உலகத்தின் முடிவு நேரத்திலோ யாவரும் காணக்கூடிய விதத்தில்
நம்மை சந்திக்க திரும்ப வருவார்
நம் கண்ணீர் யாவையும் துடைப்பார்
இந்த எண்ணம் எங்கள் யாவரையும் ஆறுதல் படுத்தும்
நாங்கள் யாவருமே சேர்ந்து
அருள்நாதர் சென்று மறைந்த திக்கை பார்த்து
இவ்வாரு ஆறுதலாக பாடுவோம்
அஞ்சாதிரு, என் நெஞ்சமே
உன் கர்த்தர் துன்ப நாளிலே
கண்பார்ப்போம் என்கிறார்
இக்கட்டில் திகையாதிரு
தகுந்த துணை உனக்கு
தப்பாமல் செய்குவார்
தாவீதும் யோபும் யோசேப்பும்
அநேக நீதிமான்களும்
உன்னிலும் வெகுவாய்
கஸ்தி அடைந்தும், பக்தியில்
வேரூன்றி ஏற்ற வேளையில்
வாழ்ந்தார்கள் பூர்த்தியாய்
கருத்தாய் தெய்வ தயவை
எப்போதும் நம்பும் பிள்ளையை
சகாயர் மறவார்
மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால்
இரக்கமான கரத்தால்
அணைத்து பாலிப்பார்
ஐயா நான் ஒரு ஏழை
இயேசு என் வீட்டிற்கு நான் கூப்பிட்டால் வருவாரா
அல்லது ஐயா நான் ஒரு செல்வந்தன் தான்
ஆனால் சாபம் நிறைந்த என் வீட்டிற்கு நான் கூப்பிட்டால் இயேசு வருவாரா
என்றெல்லாம் என் அருமை நண்பர்களே
உங்கள் உள்ளங்களில் கேள்விகள் எழக்கூடும்
ஆவல் நிறைந்த கேள்விகள் தான்
உங்களுக்கு இயேசு சொல்வதை சற்றே நினைப்பூற்றுவேன்
கேட்பீர்களா
இதோ இயேசுவாகிய நான்
வாசற்படியிலே நின்று தற்றுகிறேன்
ஒருவன் என் சப்தத்தை கேட்டு கதவை திறந்தால்
அவனிடத்தில் நான் பிரவேசித்து
அவனோடு போஜனம் பண்ணுவேன்
அவனும் என்னோடு போஜனம் பண்ணுவான்
அவருடைய இந்த வாக்கை நம்பி
இப்பொழுதே நாம் ஒவ்வொருவரும்
நம் உள்ளத்திலேயும் நம் வீட்டிற்கும்
இயேசு வந்து தங்கும்படி பிரார்த்தனை செய்வோமா
இப்பொழுதே அவர் வருவார்
நம்மோடு நிரந்தரமாய் வாழ்வார்
அன்புள்ள ஆண்டவரே
இதோ உமக்கு எங்கள் எதிரே கதவை திறக்கிறோம்
இந்நேரம் முதல் எங்கள் உள்ளங்கில் வந்து வசித்தருளும்
எங்கள் குடும்பங்களில் வந்து எங்களுடன் தங்கியிரும்
நீர் வசிக்கும் வீட்டில்
சண்டை சச்சரவு வருவது இல்லை
பொருள் குறைவு ஏற்படுவதும் இல்லை
ஆகா பழக்கவழக்கங்கள் நுழைவது இல்லை
வியாதிகள் தலை காட்டுவது இல்லவே இல்லை
பிசாசு எட்டிப்பார்பது இல்லை
அப்பா அத்தகைய ஆசீர்வாதம் நிறைந்த ஒரு
குடும்ப வாழ்வை எங்கள் ஒவ்வொருவருக்கும்
கட்டாயம் தாரும்
இன்றே தாரும்
எங்கள் குடும்பத்தில் மனம் திரும்பாமல்
பாவ வாழ்க்கையையே நடத்துகிறவர்களை
தயவாக ரட்சித்தருளும்
வேலையற்ற எங்கள் மக்களுக்கு
சீக்கிரமாய் வேலை தாரும்
ஞானமற்ற எங்கள் பிள்ளைகளுக்கு ஞானம் தாரும்
நோயில் வாடும் ஒவ்வொருவரையும்
இப்பொழுதே தொட்டு சுகமாக்கும்
பிசாசின் சக்தியால் பாதிக்கப்பட்டு வாடுபவரை
உடனே விடுதலை செய்யும்
கணவன் மனைவி மத்தியில் உள்ள சமாதான குறைவுகளை
மன கசப்புகளை மாற்றி மறுபடியும் அவர்களை சமாதானமாக
வாழும்படிக்கு இணைத்தருள்வீராக
புத்திரபாக்கியமற்ற தம்பதிகளுக்கு குழந்தைகளை அருளிச் செய்யும்
பெற்றோருக்கு கீழ்ப்படியாமல் தம் இஷ்டம்போல அலைந்து
அவர்கள் உள்ளங்களில் வேதனை உண்டாக்கும் பிள்ளைகள்
மனம் திரும்பவும் அத்தகைய குடும்பங்களில் மகிழ்ச்சி உண்டாகவும்
கிருபை செய்யும்
தகப்பனே நாங்கள் கேட்பதற்கும் வேண்டி கேள்வதற்கும்
அதிகமாக எங்களை நீர் ஆசிர்வதிக்கிறவர்
என வேதம் சொல்கிறதே
அப்படியே உம்மை ஆவலாக தேடும் எங்கள்
குடும்பங்கள் ஒவ்வொன்றின் மேலும் உம் ஆசீர்வாதங்களை
சம்பூர்ணமாக பொழிந்தருளும்
இப்பொழுதே பொழிந்தருளும்
இந்த ஜெபத்தை கேட்டு
எங்களை அவ்வாறே ஆசிர்வதிக்கிறீர்
அதற்காக உமக்கு நன்றி
இயேசு என்னும் இனிய நாமம் என்றும் வாழ்க வாழ்க
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே
நீர் இந்த உலகத்திற்கு திரும்பி வரும் மட்டும்
உம்முடைய நாமம் என்றும் வாழ்க
அற்புதங்களை செய்கிற நீர் என்றும் வாழ்க
வல்லமை உள்ளமுடைய நாமம் என்றும் வாழ்க வாழ்க
என்றும் இன்றும் வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்கவே வாழ்க இயேசுவே