Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Nee En Ulagam
Mohan Rajan
,
Harshavardhan Rameshwar
,
Sonu Nigam
Popularity · High
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
நீ என் உலகம் நீ என் இதயம்
நீதான் எதுவும் அப்பா
நீ என் கனவு நீ என் சிறகு
நீதான் உறவு அப்பா
போகும் திசை கேட்கும் இசை
எல்லாம் நீ அல்லவோ
உன்னால் பிறந்தேன் உன்னால் வளர்ந்தேன்
உனக்காய் வாழ்ந்தால் போதும்
உன் தோள் சாய்ந்து உன் கை பிடித்து
முன் போல் இருந்திட வேண்டும்
நான் உன் விதை
நீ என் சதை
நான் என்க நீ அல்லவா
எல்லா நொடியும் எனையே நினைக்கும்
அப்பா உந்தன் மனமே
எல்லா வலியும் எனக்காய் சுமக்கும்
அப்பா நீ என் நிஜமே
கண்ணீரில்லா வாழ்க்கை தரா
உன் கால்கள் ஓடி நின்றதோ
நீ என் உலகம் நீ என் இதயம்
நீதான் எதுவும் அப்பா
நீ என் கனவு நீ என் சிறகு
நீதான் உறவு அப்பா
போகும் திசை கேட்கும் இசை
எல்லாம் நீ அல்லவோ
அப்பா உன் போல் செல்வம் இல்லை
நீ தரும் செல்லம் வாரும்
மீண்டும் நானோர் குழந்தை ஆகி
உன் மடி சேர்ந்தால் சுகமே
வாழும் வரை நீளம் கதை
நெஞ்சோடு சேர்த்து வைக்கிறேன்
நீ என் உலகம் நீ என் இதயம்
நீதான் எதுவும் அப்பா
நீ என் கனவு நீ என் சிறகு
நீதான் உறவு அப்பா
போகும் திசை கேட்கும் இசை
எல்லாம் நீ அல்லவோ
ஏழு ஜென்மம் வரையில் என் துணை என நீ வர வேண்டும்
அந்த தெய்வம் அதையே கேற்று நிற்பேன் இதையே
வேறெதுவும் வாழ்வில் வேண்டாம்
தாயாகுவாய் தாலாட்டுவாய்
எப்போதும் உந்தன் அன்பிலே