Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kuttram Purinthavan (Dialogues)
C.S. Jayaraman, C.S.Jayaraman
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது?
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது?
ஆம், ஆம் வாழ்க்கையில் குற்றங்களைப் புரிந்த எனக்கு நிம்மதி ஏது?
அற்றது உலகில் அமைதியும் மகிழ்வும்
அற்றது உலகில் அமைதியும் மகிழ்வும்
அரும்பிட முடியாது...
முடியாது, உண்மை உண்மை
என் ஆனந்தம், என் மகிழ்ச்சி, என் இன்பம்
அத்தனையும் அற்றுப்போய்விட்டது
அமைதி அழிந்தது...
புயலும் எழுந்தது...
ஆணவம் இன்றோடொழிந்தது...
அமைதி அழிந்தது
புயலும் எழுந்தது
ஆணவம் இன்றோடொழிந்தது
ஒழிந்தது, ஒழிந்தது
என் ஆணவம், என் கர்வம், என் அகம்பாவம்
அத்தனையும் அற்றுப்போய்விட்டது
குணத்தை இழப்பவன் இறுதியிலே
நல்ல சுகம் அடைவதேது?
நல்ல குணத்தை இழப்பவன்
இறுதியிலே நல்ல சுகம் அடைவதேது?
வாஸ்தவம், குணத்தை இழந்தேன்
கொண்டவளைத் துறந்தேன்
கண்டவள் பின் சென்றேன்
கட்டுலலையும் இழந்தேன்
இன்று கண்ணையும் இழந்தேன்
வாழ்க்கையில் இனி எனக்கு நிம்மதி ஏது? ஏது?
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது?
வாழ்க்கையில் இனி எனக்கு நிம்மதி ஏது?
ஏது?
ஏது?
ஏது?
ஏது?