Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Thaththuva Uruvame
K. Veeramani, Somu - Gaja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அல்லல்போம், வல்வினைபோம்
அன்னை வயிற்றில் பிறந்தத் தொல்லைபோம்
போகாத் துயரம் போம்
நல்ல குணமதிக
மாமருணை கோபுரத்தில் வீற்றிருக்கும்
கணபதியை கைதொழுதக் கால்
தத்துவ உருவமே முத்தமிழ் கணபதி
தனக்குமேல் தலைவன் இல்லாத குண நிதி
அற்புத வடிவம் அமைந்த அருள் நதி
ஆக்கல் அளித்தல் அழித்தல் அவர் விதி
தத்துவ உருவமே முத்தமிழ் கணபதி
முக்கண் சந்திர சூரிய அக்கினி
முகமும் நாபியும் பிரம்மனும் விஷ்ணுவும்
ஐங்கரம் ஐந்தொழில் ஆற்றலைக் காட்டிடும்
யானை வயிற்றினில் அண்டங்கள் அடங்கிடும்
யானை வயிற்றினில் அண்டங்கள் அடங்கிடும்
தத்துவ உருவமே முத்தமிழ் கணபதி
வினை எனும் வெப்பத்தை இரு செவி விசிறிடும்
வேண்டிய யாவையும் தாள்மலர் தந்திடும்
வினை எனும் வெப்பத்தை இரு செவி விசிறிடும்
வேண்டிய யாவையும் தாள்மலர் தந்திடும்
உமையவள் சக்தியே இடப்புறம் ஒளி விடும்
ஓம் எனும் பிரணவம் உலகெலாம் வலம் வரும்
ஓம் எனும் பிரணவம் உலகெலாம் வலம் வரும்
தத்துவ உருவமே முத்தமிழ் கணபதி
தனக்குமேல் தலைவன் இல்லாத குண நிதி
தத்துவ உருவமே முத்தமிழ் கணபதி
முத்தமிழ் கணபதி முத்தமிழ் கணபதி