Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Anbulla Maan Vizhiye
T. M. Soundararajan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர்க் காதலில் ஓர் கவிதை
அன்புள்ள மன்னவனே
ஆசையில் ஓர் கடிதம்
அதைக் கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதி வந்தேன்
நலம் நலம்தானா முல்லை மலரே?
சுகம் சுகம்தானா முத்து சுடரே?
நலம் நலம்தானா முல்லை மலரே?
சுகம் சுகம்தானா முத்து சுடரே?
இளைய கன்னியின் இடை மெலிந்ததோ?
எடுத்த எடுப்பிலே நடை தளர்ந்ததோ?
வண்ணப் பூங்கொடி வடிவம் கொண்டதோ?
வாடைக் காற்றிலே வாடி நின்றதோ?
அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர்க் காதலில் ஓர் கவிதை
நலம் நலம்தானே நீ இருந்தால்
சுகம் சுகம் தானே நினைவிருந்தால்
நலம் நலம்தானே நீ இருந்தால்
சுகம் சுகம் தானே நினைவிருந்தால்
இடை மெலிந்தது இயற்கையல்லவா?
நடை தளர்ந்தது நாணம் அல்லவா?
வண்ணப் பூங்கொடி பெண்மை அல்லவா?
வாட வைத்ததும் உண்மை அல்லவா?
அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்
அதைக் கைகளில் எழுதவில்லை
இரு கண்களில் எழுதி வந்தேன்