Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Mother Song
Vignesh Shivan
,
Sid Sriram
,
Yuvan Shankar Raja
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
நான் பார்த்த முதல் முகம் நீ
நான் கேட்ட முதல் குரல் நீ
நான் முகர்ந்த முதல் மலரும் நீயே
நான் வாழ்ந்த முதல் அறை நீ
நான் வரைந்த முதல் படம் நீ
நான் விரும்பிய முதல் பெண்ணும் நீயே
சினுங்கியபோது சிரிக்க வைத்தாய்
சிறகுகள் வளர்த்து பறக்க வைத்தாய்
சிகரங்கள் ஏற சொல்லி கொடுத்தாய் ஆவலோடுதான்
வளர்ந்தவன் போல தெரிந்தாலும்
உன் கண்ணில் நானும் ஒரு குழந்தை
இமைகளுக்குள்ளே அடைக்காத்தாய் ஆசையோடுதான்
அம்மா என் முகவரி நீ அம்மா
என் முதல்வரி நீ அம்மா
என் உயிரென்றும் நீ அம்மா
நீயே எனக்கென பிறந்தாயே
அனைத்தையும் தந்தாயே
என் உலகம் நீ என் தாயே
உன் வாசம் எனக்கு வலிமை தரும்
உன் வார்த்தை எனக்கு வீரம் தரும்
உன் வாழ்கையின் மேல் என் வாழ்க்கையினை வரைந்து வைத்தாயே
ஒரு தோல்வி என்னை தொடும்போது
என் தோளை வந்து தொடுவாயே
நீ தொட்டதுமே துளங்கிடுமே எல்லாம் மாறுமே
விடுமுறையே இல்லாமல் தாய் வேலை செய்கிறாள்
இதற்கான காணிக்கையாய் நான் என்னதான் தருவதோ?
அம்மா
ஓ அம்மா
அம்மா
அம்மா என் முகவரி நீ அம்மா
என் முதல்வரி நீ அம்மா
என் உயிரென்றும் நீ அம்மா
நீயே எனக்கென பிறந்தாயே
அனைத்தையும் தந்தாயே
என் உலகம் நீ என் தாயே