Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Chinna Chinna Kangal
Yuvan Shankar Raja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ
கருவறை மீண்டும் மணக்கிறதோ
எட்டு வைத்து வானம் வருகிறதோ
தித்திப்புயல் நெஞ்சில் மூழ்கிறதோ
கண்ணே
இனி ஒரு போதும் பிரிவே இல்லை
பிஞ்சே
நீ ஒரு கோடி தாயின் பிள்ளை
உறவெல்லாம் ஒன்றாக விழியெல்லாம் தேனாக
இருளெல்லாம் தூளாக பறவைக்கூட்டில் விண்மீன் பூக்க
வாராத மாமணியாய் வந்தாயே உய்வாக
மனசெல்லாம் ஒளி வீச உன் மீசை கூட மழலை பேச
சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ
கருவறை மீண்டும் மணக்கிறதோ
எட்டு வைத்து வானம் வருகிறதோ
தித்திப்புயல் நெஞ்சில் மூழ்கிறதோ
மழை பொழிகிற இரண்டாம் நாளில் விழும் துளியில் மாசில்லை
இது ஒரு வகை இரண்டாம் பிறவி வாழ்வில் இனிமேல் குறையில்லை
யுத்தம் புரிகிற மண்ணில் மண்ணில் ரத்த பந்தம் போல் பலமில்லை
வா எழுந்திடு வாள் சுழற்றிடு வான் கிழித்திடு பயமில்லை
கீச்சை மறந்துப்போன கிளியின் மௌனம் போல
இதயம் தவித்த போது நீ இசையாய் உள்ளே வந்தாயே
உறவில்லாம் ஒன்றாக விழியெல்லாம் தேனாக
இருளெல்லாம் தூளாக பறவைக்கூட்டில் விண்மீன் பூக்க
தோழி உனைப் பார்த்ததும்
நேற்றின் முகம் யோசனை
ரெட்டை ஜடை வாசனை நீதானா? நிஜம்தானா?
வயதின் முதல் காதலா?
வார்த்தை இல்லா வெய்யிலா?
சாட்சி இல்லா சாரலா நீ தானா? நிஜம்தானா?
அடி ஏதும் அறியா என் நெஞ்சில் இறகாக விழுந்தாயே
காலம் பருவம் கடந்தாலும் கலையாமல் நின்றாயே
போவோம்
பல நாட்கள் பின்னே பின்னே
வாழ்வோம்
நாம் வளராத பிள்ளை போலே
சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ
கருவறை மீண்டும் மணக்கிறதோ
எட்டு வைத்து வானம் வருகிறதோ
தித்திப்புயல் நெஞ்சில் மூழ்கிறதோ