Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kallikkaatil Pirandha Thaaye
N. R. Raghunanthan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
கள்ளிக்காட்டில் பெறந்த தாயே
என்ன கல்லுடச்சு வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் மொளச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே
காடைக்கும் காட்டு குருவிக்கும்
எந்த புதருக்குள் எடமுண்டு
கோடைக்கும் அடிக்கும் குளிருக்கும்
தாயி ஒதுங்கதான் எடமுண்டா?
கரட்டு மேட்டயே மாத்துனா
அவ கள்ளப்புழிஞ்சி கஞ்சி ஊத்துன
கரட்டு மேட்டயே மாத்துன
அவ கள்ளப்புழிஞ்சி கஞ்சி ஊத்துன
கள்ளிக்காட்டில் பெறந்த தாயே
என்ன கல்லுடச்சு வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் மொளச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே
உழவு காட்டுல வெத வெதப்பா
ஓணான் கரட்டுல கூழ் குடிப்பா
அவாரன் குழையில கை தொடைப்பா
பாவமப்பா... ஓ ஹோ...
வேலி முள்ளில் அவ வெறகெடுப்பா
நாழி அரிசி வச்சு உலையரிப்பா
புள்ள உண்ட மிச்சம் உண்டு உசுர் வளர்ப்பா
தியாகமப்பா
கிழக்கு விடியும் முன்ன முழிக்குறா
அவ ஒலக்க பிடிச்சுதான் திறக்குறா
மண்ண கிண்டித்தான் பொழைக்கிறா
ஒடல் மக்கிப்போக மட்டும் ஒழைக்குறா
கள்ளிக்காட்டில் பெறந்த தாயே
என்ன கல்லுடச்சு வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் மொளச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே
தங்கம் தனித் தங்கம் மாசு இல்ல
தாய்ப்பால் ஒன்னில் மட்டும் தூசு இல்ல
தாய்வழி சொந்தம் போல பாசமில்ல
நேசமில்ல... ஓ ஹோ...
தாயி கையில் என்ன மந்திரமோ?
கேப்பைக் களியில் ஒரு நெய் ஒழுகும்
காஞ்ச கருவாடு தேன் ஒழுகும்
அவ சமைக்கையில
சொந்தம் நூறு சொந்தம் இருக்குது
பெத்த தாயி போல ஒன்னு நிலைக்குதா?
சாமி நூறு சாமி இருக்குது
அட தாயி ரெண்டு தாயி இருக்குதா?
கள்ளிக்காட்டில் பெறந்த தாயே
என்ன கல்லுடச்சு வளர்த்த நீயே
முள்ளுக்காட்டில் மொளச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே