Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Elangathu (From "Pithamagan")
Sriram Parthasarathy, Shreya Ghosele
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
எளங்காத்து வீசுதே, எச போல பேசுதே
எளங்காத்து வீசுதே, எச போல பேசுதே
வளையாத மூங்கிலில் ராகமும் வளஞ்சு ஓடுதே
மேகமும் முழிச்சு கேக்குதே
கரும்பாற மனசுல மயில் தோக விரிக்குதே
மழைச்சாரல் தெறிக்குதே, புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே, வானவில் குடையும் புடிக்குதே
மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு உடல் காத்தில் மெதக்குதே
எளங்காத்து வீசுதே எச போல பேசுதே
வளையாத மூங்கிலில் ராகமும் வளஞ்சு ஓடுதே
மேகமும் முழிச்சு கேக்குதே
பின்னி-பின்னி சின்ன எலையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ண துணி போல
ஒன்னுக்கொன்னுதான் எணஞ்சு இருக்கு
உறவு எல்லாம் அமஞ்சு இருக்கு
அள்ளி-அள்ளி தந்து உறவாடும்
அன்னமடி இந்த நெலம் போல
சிலருக்குத் தான் மனசு இருக்கு
ஒலகம் அதில் நெலச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு யாரும் தொணையில்ல
யாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் எணையில்ல
ஒலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தத போல
எளங்காத்து வீசுதே, எச போல பேசுதே
வளையாத மூங்கிலில் ராகமும் வளஞ்சு ஓடுதே
மேகமும் முழிச்சு கேக்குதே
ஓ மனசுல என்ன ஆகாயம்
தெனம்-தெனம் அது புதிர் போடும்
ரகசியத்த யாரு அறிஞ்சா
அதிசயத்த யாரு புரிஞ்சா
வெத வெதைக்கிற கைதானே
மலர் பறிக்குது தெனம்தோறும்
மலர் தொடுக்க நாறு எடுத்து
யார் தொடுத்தா மாலையாச்சு
ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளியெல்லாம்
மூடும் செறகிலே மெல்ல பேசும் கதையெல்லாம்
தாலாட்டு கேட்டிடாமலே
தாயின் மடிய தேடி ஓடும் மல நதி போல
கரும்பாற மனசுல மயில் தோக விரிக்குதே
மழைச்சாரல் தெறிக்குதே, புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே, வானவில் குடையும் புடிக்குதே
மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு உடல் காத்தில் மெதக்குதே