Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Manjolai Kilithaano (From "Kizhakke Pogum Rail")
P. Jayachandran
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
மாஞ்சோலை கிளிதானோ
மான்தானோ
வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ
மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ
வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ
இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர்தானோ
சலங்கைகள் தரும் இசை தேன்தானோ ஓ
மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ
வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ
இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர்தானோ
சலங்கைகள் தரும் இசை தேன்தானோ ஓ
நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள்
நீரோடை போலவே சிரித்தாடி ஓடினாள்
வளையோசையே காதிலே சிந்து பாடுதே
பளிங்குச்சிலையே பவழக்கொடியே
குலுங்கி வரும் இடையில் புரளும்
சடையில் மயக்கும் மலர்க்கொடி
மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ
வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ
இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர்தானோ
சலங்கைகள் தரும் இசை தேன்தானோ ஓ
மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும் அழகோ தேவதையோ
மின்னல் ஒளியென கண்ணைப் பறித்திடும் அழகோ தேவதையோ
அங்கம் ஒரு தங்கக்குடம் அழகினில் மங்கை ஒரு கங்கை நதி உலகினில்
துள்ளும் இதழ் தேன்தான் அள்ளும் கரம் நான்தான்
மஞ்சம்மதில் வஞ்சிக்கொடி வருவாள் சுகமே
வருவாள் சுகமே தருவாள் மகிழ்வேன்
கண் காவியம் பண் பாடிடும் பெண்ணோவியம் செந்தாமரையே
மேலாடை மாங்கனி அசைந்தாடும் வேளையில்
பலகோடிகள் ஆசையே வந்து மோதுதே
கரும்பு வயலே குறும்பு மொழியே
இளமையெனும் தனிமை நெருப்பை அணைக்கும் பருவ மழை முகில்
மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ
வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ
இவள் ஆவாரம் பூ தானோ நடை தேர்தானோ
சலங்கைகள் தரும் இசை தேன்தானோ ஓ
மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ
வேப்பந்தோப்புக் குயிலும் நீதானோ