Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ada da En Meethu
Bela Shende, Hariharan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
அடடா என் மீது தேவதை வாசனை
காதல் இதுவோ
உனையே எங்கெங்கும் காட்சிகள் காட்டிடும்
காதல் இதுவோ
உனைக்காணும் வரம் போதும்
எதிர்காலம் வசம் வசம் வரும்
வழி பாதை மரம் யாவும்
எனக்காக மழை மழை தரும்
யாரோ உன்னை என்னை
யார் சேர்த்ததோ
யாரோ வாசம் தன்னை
யார் பார்த்ததோ
உயிரில் ஒரு கோடி வானவில் பூத்திடும்
காதல் இதுவோ
எதிரே நீ வந்தால் வானவில் தோன்றிடும்
காதல் அதுவோ
ரம்யம் ததும்பும் கனவு
உன்னைக் கண்டதும் பிறந்ததே
கண்களில் வழியும் நீரில்
இன்று சர்க்கரை திரளுதே
போய் வரும் வீதியில் ஏனோ
புது வாசனை கமழுதே
காதலின் பாடலை இங்கே
இரு ஜீவன் பாடிடுதே
லலலலல லால லால
லலலலலல லாலலா
மௌனம் வந்து இடியைப் போல
மனதின் மீது விழுந்ததோ
காதலிலே நம்மை நாம் இழந்தோம்
உண்மை நாம் உணர்ந்தோம்
ஏன் கலந்தோம்
நம் கனவில் நாம் அலைந்தோம்
காற்றினில் அலையும் இறகு
எந்தப்பறவை உதிர்த்ததோ
காதலில் மயங்கும் மனது
அந்தக் கடவுளும் கொடுத்ததோ
பூட்டிய கதவின் இடுக்கில்
புது வெளிச்சம் நுழைந்ததோ
தாய்மையின் விரலைக் கொண்டு
நம்மைக் காதலும் வருடுதோ
உன்னைக் கண்ட நாளில் இருந்து
எனது வாழ்க்கை கிடைத்ததே
என்னுயிரை திறக்கும் சாவி
உனது உயிரில் இருக்குதே
காதலியே இது வேஷம் இல்லை
இங்கு பேதம் இல்லை
ஏதும் இல்லை
பனித் துளியில் சாயம் இல்லை
அடடா என் மீது தேவதை வாசனை
காதல் இதுவோ
உனையே எங்கெங்கும் காட்டிடும் காட்சிகள்
காதல் இதுவோ
உனைக்காணும் வரம் போதும்
எதிர்காலம் வசம் வசம் வரும்
வழி பாதை மரம் யாவும்
எனக்காக மழை மழை தரும்
யாரோ உன்னை என்னை
யார் சேர்த்ததோ
யாரோ வாசம் தன்னை
யார் பார்த்ததோ
உயிரில் ஒரு கோடி வானவில் பூத்திடும்
காதல் இதுவோ
எதிரே நீ வந்தால் வானவில் தோன்றிடும்
காதல் அதுவோ