Skip to content

Maniyae Manikkuyile

Mano
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

ஆண்: மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே கொடியே கொடிமலரே கொடி இடையின் நடையழகே ஆண்: தொட்ட இடம் பூமணக்கும் துளிர்க்கரமோ தொட இனிக்கும் ஆண்: பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி பெண்: ஓஹோ ஹோ ஓஓஓ மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே ஆண்: கொடியே கொடிமலரே கொடி இடையின் நடையழகே ஆண்: பொன்னில் வடித்த சிலையே பிரம்மன் படைத்தான் உனையே வண்ணமயில் போல வந்த பாவையே பெண்: எண்ண இனிக்கும் நிலையே இன்பம் கொடுக்கும் கலையே உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே ஆண்: கண்ணிமையில் தூண்டிலிட்டு காதல்தனை தூண்டிவிட்டு எண்ணி எண்ணி ஏங்கவைக்கும் ஏந்திழையே பெண்: பெண்ணிவளை ஆதரித்து பேசித்தொட்டுக் காதலித்து இன்பம்கண்ட காரணத்தால் தூங்கலையே ஆண்: சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன் கொடி இடையில் பாசம் வைத்தேன் பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி பெண்: ஓஹோ ஹோ ஓஓஓ மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே ஆண்: கொடியே கொடிமலரே கொடி இடையின் நடையழகே பெண்: தொட்ட இடம் பூமணக்கும் துளிர்க்கரமோ தொட இனிக்கும் ஆண்: பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி பெண்: ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆ பெண்: கண்ணிமைகளை வருத்தி கனவுகளைத் துரத்தி மென்மனதினால் முடித்த மூக்குத்தி ஆண்: என்னுயிரிலே ஒருத்தி கண்டபடி என்னை துரத்தி அம்மனவள் வாங்கி கொண்ட மூக்குத்தி பெண்: கோடிமணி ஓசைநெஞ்சில் கூடி வந்துதான் ஒலிக்க ஓடிவந்து கேட்கவரும் தேவதைகள் ஆண்: சூடமலர் மாலை கொண்டு தூபமிட்டு தூண்டிவிட்டு கூடவிட்டு வாழ்த்தவரும் வானவர்கள் பெண்: அந்தி வரும் நேரமம்மா ஆசை விளக்கேற்றுதம்மா ஆண்: பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி பெண்: ஓஹோ ஹோ ஓஓஓ { மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே } (2) பெண்: தொட்ட இடம் பூமணக்கும் துளிர்க்கரமோ தொட இனிக்கும் ஆண்: பூமரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி பெண்: { ஓஹோ ஹோ ஓஓஓ நானன நான நான நா ஓஹோ ஹோ ஓஓஓ நானன நான நான நா } (2)