Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Veedhikor Jaadhi
Sollisai Selvandhar
,
Arivu
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
வீதிகோர் ஜாதியும்
ஜாதிக்கு வீதியும்
கேட்காத நாதியும்
கிடைக்காத நீதியும்
எல்லாவற்றுக்கும் ஒரு உச்சகட்டம்
எனை தட்டி கேட்டால்
அது குற்றம் குற்றம்
யார் இங்கே நாயகன்
யார் இங்கே தீயவன்
ஊழலில் ஊழியம் செய்தவன்
ஊதியம் போக பாதிக்கு மேலே
எனகென எடுத்தது
தவறில்லை என்கின்ற
மனநிலை வருவது
எதனால் நீ சரி இல்லை
அதனால் காசு வாங்கி
நீயும் ஓட்டு போட்ட
ஓட்டு போட நீயும் நோட்ட கேட்ட
மக்களின் வேலைக்காரன் நான்
என்கிட்டே நீ காசு கேட்டதால்
உன்கிட்ட குடுக்க எங்கிருந்து எடுக்க
மந்திரி மந்திரி மந்திரிடா
ராஜ ராஜ தந்திரிடா
எந்திரிடா
இது என் தப்பு இல்லை
உன் தப்பு மாப்பு
வெச்சுட்டேன் ஆப்பு
Common manக்கு இங்கே
காமம் ஏறி போச்சு
நாட்டோட மானம்
விமானம் ஏறி போச்சு
நான் மட்டும் நல்லவன்
போல் இருந்து என்னாச்சு
பொறுப்பதும் மறப்பதும்
மக்களின் மான்பாச்சு
இனி என்னோட ஆட்சி
என் அரசியல் மாட்சி
கண் கொண்டு பார்
வீழ போவது நாம் அனைவரும்தான்
பணம் இனம் மொழி
மதம் பிரி வினை சுலோபம்
அலை கடல் என திரண்டு
எனக்கு சிலை வடித்திடும் படை
அடிமைகள் சுடும் வடை
அடைக்கலம் அந்த சிறை
வேட்டி சட்டை போட்ட
Modern கட்டை
என்னை நம்பி ஓட்டு போட்டால்
நாமம் பட்டை
நாற்காலி என் தாலி
கட்டாமல் வாழ்வானே
ஐந்தாண்டுக்கு ஒரு முறை
நான் வந்தேன் உன் அருகில்
நீ வேண்டான்னு சொன்னாலும்
தருவேனே எல்லாம் கையில்
ஏன்னா நான் நாட்டுக்கு ராஜா
ஏமாந்து போனது நீதான்
ஏன்னா நான் நாட்டுக்கு ராஜா
ஏமாந்து போனது நீதான்
ஒழைசாச்சு மறச்சாச்சு
குழி தோண்டி பொதைசாச்சு
ஊருக்கு முன்னாடி
வாய் கிழிய சிரிச்சாச்சு
பதவிக்கு வரும்போதே
இழந்தாச்சு மனசாட்சி
பேருக்கு மட்டும்தான்
மக்களோட ஆட்சி
ஆனா...
இனி என்னோட ஆட்சி
என் அரசியல் மாட்சி
கண் கொண்டு பார்
வீழ போவது நாம் அனைவரும்தான்
இனி என்னோட ஆட்சி
என் அரசியல் மாட்சி
கண் கொண்டு பார்
வீழ போவது நாம் அனைவரும்தான்
வீழாதே வீரனே வீரனே
வீழ்ந்தாலும்... ம்ம்...
வாழும் உன் பெயர்
I'm a practical guy
நாளைக்கே நான் போய் எதிர்கட்சில சேர்ந்திடுவேன்
சேர்ந்து ஆளும் கட்சியை திட்ட ஆரம்மிச்சுடுவேன்
நேத்து வரைக்கும் எவன்லாம் திட்டுவாங்கினானோ அவன்லாம் உக்காந்து கைதட்டுவான்
அவளவுதான், எங்களுக்கு தேவ பதவி
பதவிக்கு தேவ ஓட்டு,ஓட்டுக்கு தேவ காசு
அந்த காச குடுத்தா நீ ஓட்டு போட போற