Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kangal Rendum Pesuthey
Kausi
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
கண்கள் ரெண்டும் பேசுதே
உள்ளம் உன் வசம் ஆனதே
என்னோடு காதலில் சேர்ந்திட வந்தவள்
கள்ளம் இல்லா பெண் அவள்
கருங்கூந்தல் வாசனை ஆயிரமே
கண்ணுக்குள் காண்பவை வைரமே
ஓஹோ ஓ சொற்கள் யாவும் மின்னுமே
நதியின் அழகை போலவே
மனதை கேட்டாய் வசதி கேட்டாய்
நேரத்தைக் கூட நீ கேட்டாய்
எடுத்து தந்தேன் முழுதும் தந்தேன்
உயிரைக் கூட நான் தந்தேன்
ஏனோ ஏனோ ஏனோ
இருவிழியில் காதலை புதைத்தாய்
மீண்டும் மீண்டும் மீண்டும்
அதை மறைத்தே பொய்களை அளித்தாய்
என்னை விட இன்னொருவன் கூட நீ
ஓஹோ ஓஹோ கண்கள் ரெண்டும் பேசுதே
உள்ளம் உன் வசம் ஆனதே
என்னோடு காதலில் சேர்ந்திட வந்தவள்
கள்ளம் இல்லா பெண் அவள்
கருங்கூந்தல் வாசனை ஆயிரமே
கண்ணுக்குள் காண்பவை வைரமே
ஓஹோ ஓ சொற்கள் யாவும் மின்னுமே
நதியின் அழகை போலவே
அவளை எண்ணி முழுதும் நம்பி
தினமும் துடிக்கிறேன் வெம்பி
தெரிந்துக் கொண்டேன் புரிந்துக் கொண்டேன்
அவளின் இருமுகம் கண்டேன்
உண்மை உண்மை உண்மை
வெளி வரவே காத்திருந்தேன் அடடா
என்னை என்னை என்னை
அவள் மறக்கும் நேரம் தோன்றும் அடடா
கண்ணீர்களும் ஏமாற்றமும் தாங்கிட நான்
ஓஹோ ஓஹோ கண்கள் ரெண்டாய் பேசுதே
உள்ளம் தன் வழி போனதே
என் இந்த காதலில் வலியை தந்தவள்
கள்ளம் உள்ள பெண் அவள்
கருங்கூந்தல் வீசி சென்றவளே
கண்ணுக்குள் காண்பது மின்னலே
ஓஹோ ஓ சொற்கள் யாவும் பொய்களே
நதியின் கரைகள் போலவே
ஓஹோ ஓஹோ கண்கள் ரெண்டாய் பேசுதே
உள்ளம் தன் வழி போனதே
என் இந்த காதலில் வலியை தந்தவள்
கள்ளம் உள்ள பெண் அவள்
கருங்கூந்தல் வீசி சென்றவளே
கண்ணுக்குள் காண்பது மின்னலே
ஓஹோ ஓ சொற்கள் யாவும் பொய்களே
நதியின் கரைகள் போலவே