Nila Kayum (From "Chembaruthi")
Mano, S. Janaki
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
பாடகர்கள்: மனோ, எஸ். ஜானகி
இசை அமைப்பாளர்: இளையராஜா
பாடல் வரிகள்: வாலி
ஆண்: நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
பெண்: நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
ஆண்: பார்வையில் புதுப்புது
கவிதைகள் மலர்ந்திடும்
காண்பவை யாவுமே தேன்
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
பெண்: நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
ஆண்: தென்றல் தேரில் நாம் தான்
போகும் நேரம் பார்த்து
தேவர் கூட்டம் பூத்தூவி
பாடும் நல்ல வாழ்த்து
பெண்: கண்கள் மூடி நான் தூங்க
திங்கள் வந்து தாலாட்டும்
காலை நேரம் ஆனாலே
கங்கை வந்து நீராட்டும்
ஆண்: நினைத்தால் இது போல்
ஆகாததேது
பெண்: அணைத்தால் உனைத்தான்
நீங்காது பூமாது
ஆண்: நெடுநாள் திருத்தோள்
எங்கும் நீ கொஞ்ச
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
பெண்: நிலா காயும் நேரம் சரணம்
ஆண்: உலா போக நீயும் வரணும்
பெண்: மின்னல் நெய்த சேலை
மேனி மீது ஆட
மிச்சம் மீதி காணாமல்
மன்னன் நெஞ்சம் வாட
ஆண்: அர்த்த ஜாமம் நான் சூடும்
ஆடை என்றும் நீயாகும்
அங்கம் யாவும் நீ மூட
ஆசை தந்த நோய் போகும்
பெண்: நடக்கும் தினமும்
ஆனந்த யாகம்
ஆண்: சிலிர்க்கும் அடடா
ஸ்ரீதேவி பூந்தேகம்
பெண்: அனைத்தும் வழங்கும்
காதல் வைபோகம்
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
ஆண்: நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
பெண்: பார்வையில் புதுப்புது
கவிதைகள் மலர்ந்திடும்
காண்பவை யாவுமே தேன்
ஆண்: அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே
பெண்: நிலா காயும் நேரம் சரணம்
ஆண்: உலா போக நீயும் வரணும்
பேபிஹரி - தி புதுப்பாளையம்