Dhinam Dhinam
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
உன்னை நானும் அறிவேன் என்னை நீயும் அறியாய்
யாரென்று நீ உணரும் முதல் கட்டம்
மலருன்னை நினைத்து மலர் தினம் வைத்தேன்
மலருன்னை நினைத்து மலர் தினம் வைத்தேன்
மைவிழி ராபப்பா... மயக்குதே
டிஸ்கோ டிஷ்கோ டிஷ்கோ
கவிதைகள் வரைந்தேன் அதிலெந்தன் ரசனையை கண்டாயோ
கடிதங்கள் போட்டேன் இதயத்தை பதிலாக்கி தருவாயோ
முல்லை உன்னை அடைய முயற்சியை தொடர்வேன்
மௌனமாகி போனால் மனதினில் அழுவேன்
பாவையின் பார்வையே அமுதமாம்
தக தக தக தக தம்
தேவியின் ஜாடையே தென்றலாம்
தக தக தக தக தம்
தவம் கூட செய்வேன் தேவதையே நீ கண் திறந்து பாராயோ
உயிரையும் விடுவேன் காப்பாற்ற மனமின்றி போவாயோ
திறியற்று கருகும் தீபமென ஆனேன்
எண்ணையென நினைத்து உன்னை தானே அழைத்தேன்
நிலவே நீ வா நீ வா
தக தக தக தக தம்
நினைவே நீ தான் நீ தான்
தக தக தக தக தம்
தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
உன்னை நானும் அறிவேன் என்னை நீயும் அறியாய்
யாரென்று நீ உணரும் முதல் கட்டம்
டிஸ்கோ டிஸ்கோ...
அன்பு கிருஷ்ணா