Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sirahugal
Prezanthi Shanmugavel, Kugan Prabhu, Mirun Pradhap
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
தீப்பனியே என்னில் தூவாமலே
தீ நதியில் எரிந்தேன்
வான்குடையே உனை காணாமலே
தீமழையில் நனைந்தேன்
பெண்ணே உந்தன் பேரில் காந்தமா
சொன்னேன் உன்னில் ஒட்டிக்கொண்டேனே
வானே உந்தன் காதல் எல்லையா
அந்தம் தேடி ஓய்ந்து போனேனே
சிறகுகள் முளைக்குதே
உன் சிரிப்பினில் சிலையாகி
நான் சிலிர்க்கிறேன்
விண்வெளியில் மிதக்கிறேன்
உன் வார்த்தைகளில் வீழ்ந்தே நான்
வியர்க்கிறேன் ஓ ஓ
Yeh
Okay
காத்திருப்பேன் வருகிறேன்
மிருன்
Haaa
Let's Go
உன் குரலினில் நானும் அன்று உருகும் பனியா
தேன்நிலவினில் யாதும் சற்று இனிக்கும் கனியா
இந்நாளினில் யாவும் கற்று திறக்கும் மங்கையா
பின் நாவினில் தாகம் என்றும் நனைக்கும் இச்சையா
உயிரே உந்தன் பேச்சில் நானும் வியக்கிறேன்
வேகமே உந்தன் மௌனம் கண்டு ரசிக்கிறேன்
திமிரே உந்தன் உலகம் காண முயல்கிறேன்
மோகம் இல்லா காதல் உன்னில் நானும் மெல்ல உணர்கிறேன்
ஓ ரணங்கள் மட்டுமோ உனக்கும் சொந்தமோ
உயிரே நம் காதல் தரும் மருந்தோ
ஒ கணங்கள் கனமோ வதைக்கும் பிரிவோ
இனியும் நம் திருநாள் நமதோ
ஆயிரம் கேள்விகள் உனக்குள்ளே கலவரம்
ஆயிடும் வருத்தங்கள் எனக்குள்ளே ஒருபுறம்
கேள்விகள் பதில்கள் சிக்கியதோ எந்தன் மனம்
இணையக் காதலுக்கும் சிறகுகள் முளைக்கணும்
சிறகுகள் முளைக்குதே
உன் சிரிப்பினில் சிலையாகி
நான் சிலிர்க்கிறேன்
விண்வெளியில் மிதக்கிறேன்
உன் வார்த்தைகளில் வீழ்ந்தே நான் வியர்க்கிறேன்
கதை உனக்கதை இன்னும் கூறாமலே
காதலிலே கரைந்தேன்
நினை என்னை இணை என்று கேளாமலே
உன் மனதில் கலந்தேன்
ஓயாத ஆசையில் காயம் தேயவா
இங்கு மீளா காதலில் போதையாகவா
தீராத மோகத்தின் தீயில் வேகவா உன்னை
காணாதேங்கினேன் தாகம் தீர்க்கவா
சிறகுகள் முளைக்குதே
உன் சிரிப்பினில் சிலையாகி
நான் சிலிர்க்கிறேன்
விண்வெளியில் மிதக்கிறேன்
உன் வார்த்தைகளில்
வீழ்ந்தே நான் வியர்க்கிறேன்