Thaana Vantha
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
தானா வந்த சந்தனமே
உன்ன தழுவ தினம் சம்மதமே
தானா வந்த சந்தனமே
உன்ன தழுவ தினம் சம்மதமே
இது வேறாரும் பறிக்காத
மல்லிக தோட்டமே
யாராலும் படிக்காத மங்கள ராகமே
இது வேறாரும் பறிக்காத
மல்லிக தோட்டமே
யாராலும் படிக்காத மங்கள ராகமே
தானா வந்த சந்தனமே
உன்ன தழுவ தினம் சம்மதமே
வண்ண வண்ண வளவி போட்டு
வசமாக வளைச்சிப் போட்டு
என்னைக் கட்டி இழுத்து போகும்
இளந்தேகமே
கூறைபட்டு கலைஞ்சிடாம
குறை ஏதும் நடந்திடாம
ஆசைப்பட்டு அணைக்கவேணும்
மகராசனே
முன்ன பின்ன அறிஞ்சதில்ல
முறையாக தெரிஞ்சதில்ல
சின்ன சின்ன தவற நீயும்
பொறுத்தாக வேணுமே
புத்தகத்தில் படிக்கவில்ல
புரியாம நடிக்கவில்ல
வித்தைகள வெவரமாக
வெளியாக்க வேணுமே
இந்த மேனி இன்பத் தோணி
ராணி இந்த ராணி
இந்த ராஜனோட விருப்பமே
தானா வந்த சந்தனமே
உன்ன தழுவ தினம் சம்மதமே
இது வேறாரும் பறிக்காத
மல்லிக தோட்டமே
யாராலும் படிக்காத
மங்கள ராகமே
தானா வந்த சந்தனமே
உன்ன தழுவ தினம் சம்மதமே
முத்துநவ ரத்தினத்தோட
முழுசான லட்சணத்தோட
மெத்தையில நானும் கூட
வர வேணுமே
முன்னம் ரெண்டு பவளத்தோட
முன்வாயில் மதுரத்தோட
கண்ணனுக்கு காதல் விருந்து
தர வேணுமே
தொட்டுத் தொட்டு சுகமும் கூட
சுதியோடு கலந்து பாட
விட்டு விட்டு விலகி ஓட
முடியாம போகுமே
கொத்துமல்லி கொண்டையிலாட
குளிர் பார்வை வண்டுகளாட
புத்தம் புது செண்டுகளாட
புது தாகம் தோணுமே
செல்ல ராசா சொல்லு லேசா
ராசா இந்த ராசா
இந்த ராணியோட பொருத்தமே
தானா வந்த சந்தனமே
உன்ன தழுவ தினம் சம்மதமே
இது வேறாரும் பறிக்காத
மல்லிக தோட்டமே
யாராலும் படிக்காத
மங்கள ராகமே
தானா வந்த சந்தனமே
உன்ன தழுவ தினம் சம்மதமே