Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
En Mannavaa
Aditi Paul
,
Srinivas
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
என் மன்னவா! மன்னவா!
என்னைவிட அழகி உண்டு
ஆனால் உன்னைவிட உன்னைவிட
தலைவன் இல்லை ஆமாம்
தலைவன் இல்லை
சின்னச் சின்ன நட்சத்திரம்
பறிக்க வந்தாய் - இந்த
வெண்ணிலாவை வெண்ணெய் பூசி
விழுங்கிவிட்டாய்
சின்னச் சின்ன நட்சத்திரம்
பறிக்க வந்தாய் - இந்த
வெண்ணிலாவை வெண்ணெய் பூசி
விழுங்கிவிட்டாய்
அதிவீரா
உயிரை உயிரால் தொடுவீரா?
உன் கண்களும் உன் கண்களும்
தூர் தேடுதே
உன் கைகளும் உன் கைகளும்
வேர் தேடுதே
சின்னச் சின்ன நட்சத்திரம்
பறிக்க வந்தேன் - இந்த
வெண்ணிலாவை வெண்ணெய் பூசி
விழுங்கிவிட்டேன்
அதிவீரா
உயிரை உயிரால் தொடுவீரா?
அதிவீரா
உயிரை உயிரால் தொடுவீரா?
நூறு யானைகளின்
தந்தம்கொண்டு - ஒரு
கவசம் மார்பில் அணிந்தாய்
கலசம்கொண்டு அந்தக் கவசம் உடைத்து
உன் மார்பில் நான் பகுந்தேனே
தென்னாட்டுப் பூவே
தேனாழித் தீவே
பாலன்னம் நீ - தான்
பசிக்காரன் நான் தான்
மோகக் குடமே
முத்து வடமே
உந்தன் கச்சை மாங்கனி
பந்தி வை ராணி
சின்னச் சின்ன நட்சத்திரம்
பறிக்க வந்தாய் - இந்த
வெண்ணிலாவை வெண்ணெய் பூசி
விழுங்கிவிட்டாய்
அதிவீரா
உயிரை உயிரால் தொடுவீரா?
வெயில் பாராத
வெள்ளைப் பூக்களைக்
கையில் தருவாய் கண்ணே
ஏழு தேசங்களை வென்ற மன்னன் - உன்
கால் சுண்டுவிரல் கேட்டேனே
சிற்றின்பம் தாண்டி
பேரின்பம் கொள்வோம்
உயிர் தீண்டியே நாம்
உடல் தாண்டிப் போவோம்
ஞான அழகே
மோன வடிவே
என்னைக் கூடல்கொள்ள வா
கொற்றவை மைந்தா
சின்னச் சின்ன நட்சத்திரம்
பறிக்க வந்தேன் - இந்த
வெண்ணிலாவை வெண்ணெய் பூசி
விழுங்கிவிட்டேன்
சின்னச் சின்ன நட்சத்திரம்
பறிக்க வந்தாய் - இந்த
வெண்ணிலாவை வெண்ணெய் பூசி
விழுங்கிவிட்டாய்
அதிவீரா
உயிரை உயிரால் தொடுவீரா?
அதிவீரா
உயிரை உயிரால் தொடுவீரா?