Skip to content

Pookkalin Kathinil

Sujata, Karthik, S.A. Rajkumar
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

பூக்களின் காதினில் வண்டுகள் ரகசிய பாடல்கள் பாடுது காதலுடன் மூங்கில் துளையினில் மெல்லிய காற்று மோகனம் இசைக்குது காதலுடன் இதயங்கள் துடிக்குது ஆவலுடன் கடிதங்கள் பறக்குது காதலுடன் அவரவர் மனதினில் அவரவர் அளவுக்கு சிறகுகள் காதலுடன் காதலுடன் உன் காதலுடன் காதலுடன் உயிர் காதலுடன் காதலுடன் உன் காதலுடன் காதலுடன் உயிர் காதலுடன் நேற்று வரை ஒரு யாசகனாய் உன் பார்வைக்கு காத்திருந்தேன் பல ஆசைகளை நான் சுமந்தபடி உன் வருகைக்கு தவமிருந்தேன் தேவதையே உன் தேவை என்ன உடன் மரங்களை கேட்டுவிடு சிறு கண்ணசைவில் உன் காதலனை ஒரு வள்ளல் ஆக்கிவிடு வானத்து வானத்து நிலவெடுத்து நீ வாசலில் வாசலில் வெளிச்சமிடு பூசணி பூசணி பூப்பரித்து புது புள்ளிகள் வைத்து கோலமிடு என் கனவுகள் யாவையும் உன் வசம் தந்தேன் நிஜமாய் நிஜமாய் மாற்றிவிடு காதலுடன் உன் காதலுடன் காதலுடன் உயிர் காதலுடன் காதலுடன் உன் காதலுடன் காதலுடன் உயிர் காதலுடன் நிலவினிலே உன் பெயரெழுதி நான் இரவினில் ரசித்திருப்பேன் என் உயிரினிலே உன் பெயரெழுதி நான் தினம் தினம் உச்சரிப்பேன் சூரியனை நான் சிறைப்பிடித்து உன் மூக்குத்தி ஆக்கிடவா அடி சிம்ஃபனியில் உன் சிரிப்பொலியை ஒரு சுரமாய் சேர்த்திடவா காதலில் காதலை காதலனே பல காலமும் ஆயிரம் பொய்கள் உண்டு ஆயினும் ஆயினும் உன் போல பொய் அழகாய் யாரும் சொன்னதில்லை உன் கவிதையின் காதலை பொய் என்றாலும் நிஜமாய் நிஜமாய் நேசிக்கிறேன் காதலுடன் உன் காதலுடன் காதலுடன் உயிர் காதலுடன் காதலுடன் உன் காதலுடன் காதலுடன் உயிர் காதலுடன்