Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Idhudhana
K.S. Chithra & Thamarai
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
இதுதானா இதுதானா
எதிா்பாா்த்த அந்நாளும் இதுதானா
இவன்தானா இவன்தானா
மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா
பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானேன்
திருமண நாள் எண்ணி நகா்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிாிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்
இதுதானா இதுதானா
எதிா்பாா்த்த அந்நாளும் இதுதானா
இவன்தானா இவன்தானா
மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா
இனிமேல் வீட்டில் தினமும் நடக்கும் நாடகம் இனித்திடுமே
ஒளிந்திடும் எனையே உனது விழிகள் தேடியே அலைந்திடுமே
மாடியின் வளைவினில், என்னை கண்டு பிடிப்பாய்
பாா்க்காதவன் போல், சிறப்பாய் நடிப்பாய்
திடுமென திரும்பி என் இடை வளைப்பாய்
படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்
அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே
வெக்கங்களும் வெட்கப்பட்டு ஒளிந்திடுமே
இதுதானா இதுதானா
எதிா்பாா்த்த அந்நாளும் இதுதானா
இவன்தானா இவன்தானா
மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா
ஞாயிறு மதியம் சமையல் உனது
விரும்பி நீ சமைத்திடுவாய்
வேடிக்கை பாா் என என்னை அமா்த்தி
துணிகளும் துவைத்திடுவாய்
ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க
வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சினுங்க
பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க
இருவாின் உலகமும் இருவாி சுருங்க
மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலா்ந்திடுமே
என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளா்ந்திடுமே
மலா் சூட்டும் மணவாளன் இவன்தானா
பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானேன்
திருமண நாள் எண்ணி நகா்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமையானேன்
இதழ் பிாிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடிக்கொள்வேன்