Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Vettri Venduma
Sirkazhi Govindarajan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
வெற்றி வேண்டுமா?
போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
சரிதாம் போடா
தலைவிதி என்பது வெறுங்கூச்சல்
எண்ணித் துணிந்தால் இங்கு
என்ன நடக்காதது?
கொஞ்சம் முயன்றால் இங்கு
எது கிடைக்காதது?
வெற்றி வேண்டுமா?
போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
பிள்ளையைப் பெறுகிற அம்மாவுக்கு
பத்து மாசமும் எதிர்நீச்சல்
பொறக்குற கொழந்த நடக்குற வரையில்
தரையில் போடுவது எதிர்நீச்சல்
பள்ளிக்குப் பள்ளி இடத்துக்கு அலையும்
அப்பனுக்கதுதான் எதிர்நீச்சல்
பிள்ளைக்கு எப்படி இடம் கிடைச்சாலும்
பரிட்சை வந்தா எதிர்நீச்சல்
எதிர்நீச்சல்
வெற்றி வேண்டுமா?
போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
கடற்கரையோரம் நடக்குற காதல்
கல்யாணம் முடிப்பது எதிர்நீச்சல்
கணக்குக்கு மேலே பிள்ளையை பெத்து
காலங்கழிப்பதும் எதிர்நீச்சல்
கண்மூடி வழக்கம் மண்மூடிப் போகக்
கருத்தைச் சொல்லுவது எதிர்நீச்சல்
வீட்டுக்கு வீடு ஓட்டுக்கள் வாங்கி
பதவிக்கு வருவது எதிர்நீச்சல்
எதிர்நீச்சல்
வெற்றி வேண்டுமா?
போட்டுப் பாரடா எதிர்நீச்சல்
சரிதாம் போடா
தலைவிதி என்பது வெறுங்கூச்சல்
எண்ணித் துணிந்தால் இங்கு
என்ன நடக்காதது?
கொஞ்சம் முயன்றால் இங்கு
எது கிடைக்காதது?
வெற்றி வேண்டுமா?
போட்டுப் பாரடா எதிர்நீச்சல்