Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Apple Penne Neeyaaro
Srinivas
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
Apple பெண்ணே நீ யாரோ...
ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ...
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ
Apple பெண்ணே நீ யாரோ
ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ
பூவின் மகளே நீ யாரோ
புன்னகை நிலவே நீ யாரோ
பாதி கனவில் மறையும் பறவை யா... ரோ...
என்னை நீ பார்க்கவில்லை
என் உயிர் நொந்ததடி
பெண்ணே நீ போன வழியில்
என் உயிர் போனதடி
எங்கோ ஓர் சாலை வளைவில்
உன் பிம்பம் தொலைந்தடி
அங்கேயே நின்று கொண்டு
என் உயிர் ஏங்குதடி
மின்னலை கண்டு கண்கள் மூடி கண்களை திறந்தேன் காணவில்லை
மின்னல் ஒளியை கையில் கொள்ள அய்யோ அய்யோ வசதியில்லை
என்னை நோக்கி சிந்திய மழை துளி
எங்கே விழுந்தது தெரியவில்லை
எந்த சிற்பியில் முத்தாய் போச்சோ இதுவரை ஏதும் தகவல் இல்லை
அழகே உன்னை காணாமல்
அன்னம் தண்ணீர் தொடமாட்டேன்
ஆகயத்தின் மறுப்பக்கம்
சென்றால் கூட விடமாட்டேன்
உன்னை காணும் முன்னே கடவுள் வந்தாலும் கடவுளைத் தொழமாட்டேன்
எங்கோ ஓர் சாலை வளைவில்
உன் வின்பம் தொலைந்தடி
அங்கேயே நின்று கொண்டு
என் உயிர் ஏங்குதடி
Apple பெண்ணே நீ யாரோ
ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ
பெண்ணே உன்னை மறுமுறை பார்த்தல் love you love you சொல்வாயா
பாவம் அய்யோ பைத்தியம் என்று பார்வையினாலே கொல்வாயா
உலகின் விளிம்பில் நீயிருந்தாலும்
அங்கும் வருவேன் அறிவாயா
உயிரை திருகி கையில் தந்தால்
Okay என்று சொல்வாயா
ஆமாம் என்று சொல்லி விட்டால்
ஆண்டுகள் நூறு உயிர் தரிப்பேன்
இல்லை என்று சொல்லி விட்டால்
சொல்லின் முடிவில் உயிர் துறப்பேன்
நான் இன்னோரு கருவில்
பிறந்து வந்தேனும் மீண்டும் காதலிப்பேன்
எங்கோ ஓர் சாலை வளைவில்
உன் பிம்பம் தொலைந்ததடி
அங்கேயே நின்று கொண்டு
என் உயிர் ஏங்குதடி
Apple பெண்ணே நீ யாரோ
ஐஸ்கிரீம் சிலையே நீ யாரோ
கண்ணில் தோன்றி மறையும் கானல் நீரோ
பூவின் மகளே நீ யாரோ
புன்னகை நிலவே நீ யாரோ
பாதி கனவில் மறையும் பறவை யா... ரோ...