Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ponnondru Kandaen
P.b. Sreenivas, T.m. Soundararajan
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா
பூ ஒன்று கண்டேன்
முகம் காணவில்லை
ஏனென்று நான் சொல்லலாகுமா
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா
நடமாடும் மேகம்
நவ நாகரீகம்
அலங்காரக் கின்னம்
அலை போல மின்னும்
நடமாடும் செல்வம்
பணிவான தெய்வம்
பழங்கால சின்னம்
உயிராக மின்னும்
துள்ளி வரும்...
வெள்ளி நிலா...
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும்...
கொடியிடையாள்...
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும்
பெண் அந்த பெண்ணல்லவோ?
சென்றேன்... கண்டேன்... வந்தேன்
பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்ல வேண்டுமா
நான் பார்த்த பெண்ணை
நீ பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்கவில்லை
உன் பார்வை போலே
என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி
நீ காணவில்லை
நான் கண்ட காட்சி
நீ காணவில்லை
என் விழியில்...
நீ இருந்தாய்
என் விழியில் நீ இருந்தாய்
உன் வடிவில்...
நான் இருந்தேன்
உன் வடிவில் நான் இருந்தேன்
நீயின்றி நான் இல்லை
நானின்றி நீ இல்லையே
சென்றேன்... கண்டேன்... வந்தேன்
பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா