Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Theekkoluthi
Nivas K Prasanna Mari Selvaraj
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
தீ மூட்டி, தீ மூட்டி நெஞ்சாங்கூட்ட பத்தவச்ச
காட்டுப்பேச்சி நீ, காட்டுப்பேச்சி நீ
தாலாட்டி-தாலாட்டி பச்சப்புள்ள ஏங்கவெச்ச
பாட்டுபேச்சி நீ, பாட்டுபேச்சி நீ
(ஓடியா!)
(ஓடியா!)
ராசாத்தி ஒன் நெனப்பு கருவக்காட்டு முள்ளாச்சுடி
அடியாத்தி ஒன் சிரிப்பு புளியங்காட்டு பூவாச்சுடி
(ஓடியா!)
போற நீ வாக்கப்பட்டு, ஒடஞ்சேன் நான் ஏக்கப்பட்டு
மருதாணி நீதான்டி மனசெல்லாம் ஒன் நெறம்தான்டி
அடியே போடி, நீ போடி
உன்ன தேடி, என்ன தேடி என் உசுரும் ஓடுது, ஒடம்போ வேகுது
மஞ்சனத்தி, அடியே மஞ்சனத்தி
நீ தீக்கொளுத்தி-தீக்கொளுத்தி, தீக்கொளுத்தி-தீக்கொளுத்தி-ஈ, தீ-ஈ
அடியே மச்சி வீட்டு மயிலே, என் மனசு போடும் மாராப்பு மேல
ஒன் பாசம் எறியுதடி, அதுல என் ஆச துடிக்குதடி
அடியே மச்சி வீட்டு மயிலே, ஒன் தவிப்பு போடும் தண்டார ஓச
என் கூட்ட ஒடைக்குதடி, அதுல ஒன் வாசம் நொழைக்குதடி
ஒன் வாசம் நொழைக்குதடி, என் கூட்ட ஒடைக்குதடி
என் ஆச வெடிக்குதடி, ஒன் பாசம் எறியுதடி
ஒன் வாசம் நொழைக்குதடி, என் கூட்ட ஒடைக்குதடி
என் ஆச வெடிக்குதடி, ஒன் பாசம் எறியுதடி (ஓடியா!)
அடியே பொட்டுவச்ச என் இரத்தினமே
வரஞ்சு வெச்ச என் சித்திரமே
பூ முடிச்சு நீ போகையில தீப்பிடிச்சு நான் சாவுறேனே
தீப்பிடிச்சு நான் சாவுறேனே, தீப்பிடிச்சு நான் சாவுறேனே
நீ மலையேறி போற, நான் மண்ணோடு போறேன்
நீ கரையேறி போற, நான் கடலோடு போறேன்
நீ காத்தோடு காத்தாக, கனவோடு கனவாக
ஒளியோடு ஒளியாக, வலியோடு வலியாக
எங்கேயோ போற, எங்கேயோ போற, எங்கேயோ போற
ராசாத்தி ஒன் நெனப்பு கருவக்காட்டு முள்ளாச்சுடி
அடியாத்தி ஒன் சிரிப்பு புளியங்காட்டு பூவாச்சுடி
போற நீ வாக்கப்பட்டு, ஒடஞ்சேன் நான் ஏக்கப்பட்டு
மருதாணி நீதான்டி மனசெல்லாம் ஒன் நெறம்தான்டி
அடியே போடி, நீ போடி
உன்ன தேடி, என்ன தேடி என் உசுரோ ஓடுது, ஒடம்போ வேகுது
மஞ்சனத்தி, அடியே மஞ்சனத்தி
நீ தீக்கொளுத்தி-தீக்கொளுத்தி
தீக்கொளுத்தி, தீ-தீ-தீக்கொளுத்தி, தீ-தீ-தீக்கொளுத்தி
அடியே ஒத்த சொல்லு ஒயிலே, என் மனசு போடும் மாராப்பு மேல
ஒன் பாசம் எறியுதடி, அதுல என் ஆச துடிக்குதடி
அடியே ஒத்த சொல்லு ஒயிலே, ஒன் தவிப்பு போடும் தண்டார ஓச
என் கூட்ட ஒடைக்குதடி, அதுல ஒன் வாசம் நொழைக்குதடி
ஒன் வாசம் நொழைக்குதடி, என் கூட்ட ஒடைக்குதடி
என் ஆச துடிக்குதடி, ஒன் பாசம் எறியுதடி (பாசம் எறியுதடி)
ஒன் வாசம் நொழைக்குதடி, என் கூட்ட ஒடைக்குதடி
ஒன் பாசம் எறியுதடி, என் ஆச துடிக்குதடி