Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kaattu Sirukki (From "Raavanan")
A. R. Rahman
Popularity · Moderate
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி
யார் காட்டுசிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
ஓ காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி
யார் காட்டுசிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
ஈக்கி மின்னல் அடிக்குதடி (யாத்தே)
ஈரக்கொல துடிக்குதடி (யாத்தே)
ஈக்கி மின்னல் அடிக்குதடி (யாத்தே)
ஈரக்கொல துடிக்குதடி (யாத்தே)
நச்சு மனம் மச்சினியோடு மச்சினியோடு மருகுதடி
அவ நெத்தியில் வச்ச பொட்டுல
என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே
அவ நெத்தியில் வச்ச பொட்டுல
என் நெஞ்சாங்குழியே ஒட்டுதே
அவ பார்வையில் எலும்புகள் பல்பொடி ஆச்சே
காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி
யார் காட்டுசிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
யாரோ எவளோ யாரோ எவளோ
யார் காட்டுசிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
தண்டை அணிஞ்சவ கொண்டை சரிஞ்சதும்
அண்ட சராசரம் போச்சு
வண்டு தொடாமுகம் கண்டு வனாந்தரம்
வாங்குதே பெருமூச்சு
காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி
காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி
யார் காட்டுசிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
உச்சந்தலை வகுடுவழி ஒத்த மனம் அலையுதடி
உதட்டு வரி பள்ளத்துல உசிர் விழுந்து தவிக்குதடி
பாழாப் போன மனசு பசி எடுத்து
கொண்ட பத்தியத்தை முறிக்குதடி
பாராங்கல்ல சுமந்து வழி மறந்து
ஒரு நத்தை குட்டி நகருதடி
கொண்டை காலு சிவப்பும் மூக்கு வனப்பும்
என்னை கிறுக்குன்னு சிரிக்குதடி
ஏ-காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி
யார் காட்டுசிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
யாரோ எவளோ யாரோ எவளோ
யார் காட்டுசிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
தண்டை அணிஞ்சவ கொண்டை சரிஞ்சதும்
அண்ட சராசரம் போச்சு
வண்டு தொடாமுகம் கண்டு வனாந்தரம்
வாங்குதே பெருமூச்சு
ஹே-ஹே-ஏர் கிழிச்ச தடத்து வழி
நீர் கிழிச்சி போவது போல்
நீ கிழிச்ச கோட்டு வழி நீளுதடி என் பொழப்பு
ஊராங்க் காட்டு கனியே உன்னை நெனைச்சு
நெஞ்சு சப்பு கொட்டி துடிக்குதடி
யாத்தே இது சரியா இல்லை தவறா
நெஞ்சில் கத்தி சண்டை நடக்குதடி
உன்னை முன்ன நிறுத்தி என்னை நடத்தி
கெட்ட விதி வந்து சிரிக்குதடி
ஓ-காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி
ஓ-காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி
யார் காட்டுசிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி
யார் காட்டுசிறுக்கி இவ
காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி
யார் காட்டுசிறுக்கி இவ
ஓ காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி
யார் காட்டுசிறுக்கி இவ
மழை கொடுப்பாளோ இடி இடிப்பாளோ
மாயமாய் போவாளோ
எய் காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி
யார் காட்டுசிறுக்கி இவ
காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி
யார் காட்டுசிறுக்கி இவ
காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி
யார் காட்டுசிறுக்கி இவ
காட்டுசிறுக்கி காட்டுசிறுக்கி
யார் காட்டுசிறுக்கி இவ