Paayum Oli Nee Yenaku
Ratchakan Sridhar
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
பாயுமொளி நீ எனக்கு
பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு
தும்பியடி நான் உனக்கு
வாயுரைக்க வருகுவதில்லை
வாழிநின்றன் மேன்மை எல்லாம்
தூய சுடர் வானொலியே
சூரையமுதே
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
வீணையடி நீ எனக்கு
மேவும் விறல் நானுனக்கு
பூணும் வடம் நீ எனக்கு
புது வைரம் நான் உனக்கு
காணுமிடந்தோறும் நின்றான்
கண்ணினொளி வீசுதடி
மானுடைய பேரரசே
வாழ்வு நிலையே கண்ணம்மா
வான மழை நீ எனக்கு
வண்ண மயில் நான் உனக்கு
பானமடி நீ எனக்கு
பாண்டமடி நான் உனக்கு
ஞான ஒளி வீசுதடி
நங்கை நின்றன் ஜோதிமுகம்
ஊனமறு நல்லழகே
ஊரு சுவையே கண்ணம்மா
வெண்ணிலவு நீ எனக்கு
மேவு கடல் நான் உனக்கு
பண்ணுசுதி நீ எனக்கு
பாட்டினிமை நான் உனக்கு
எண்ணி எண்ணி பார்த்திடிலோர்
எண்ணமில்லை நின்சுவைக்கே
கண்ணின் மணி போன்றவளே
கட்டியமுதே
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா (கண்ணம்மா) கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
வீசுகமழ் நீ எனக்கு
விரியுமலர் நான் உனக்கு
பேசுபொருள் நீ எனக்கு
பேணுமொழி நான் உனக்கு
நேசமுள்ள வான்சுடரே
நின்னழகாய் எத்துறைப்பேன்
ஆசை மதுவே கனியே
அல்லு சுவையே கண்ணம்மா
காதலடி நீ எனக்கு
காந்தமடி நான் உனக்கு
வேதமடி நீ எனக்கு
விந்தையடி நான் உனக்கு
போதமுற்ற போதினிலே
பொங்கிவரும் தீஞ்சுவையே
நாதவடிவானவளே
நல்ல உயிரே (கண்ணம்மா)
நல்லவுயிர் நீ எனக்கு
நாடியடி நான் உனக்கு
செல்வமடி நீ எனக்கு
சேமநிதி நான் உனக்கு
எல்லையற்ற பேரழகே
எங்கும் நிறை பொற்சுடரே
முல்லை நிகர் புன்னகையை
மோதுமின்பமே
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா (அடியே கண்ணம்மா) கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா (கண்ணம்மா)