Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kannai Moodinen
Anuradha Sriram
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
உன் முக அன்பில் உருகிப் போகிறேன்
எந்தன் மனம் உன் நினைவைப் பாட கேட்கிறேன்
உன்னைக் கண்டப்பின் என்ன வேண்டுவேன்
என்ன வேண்டுவேன் யேசு தெய்வமே
உன்னை நான் பிரியா வரமாய் வருவாய்
அருள்புரிவாய்
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
என்னை நீயும் அன்பு செய்யும் அளவைத் தேடினேன்
உந்தன் அன்பு முடிவில்லாது நீண்டு போவதேன்
மண்டியிட்டு எனது பாதம் கழுவிச்சொன்ன உன்
அன்பின் பாடம் ஆழம் கண்டு கண்கள் கலங்குதே
இந்த பாடம் விளக்கம் காண சிகரம் ஏறினேன்
சிகரத்திலே விரிந்த கரங்கள் விளக்கம் சொல்லுதே
இறைவன் நீதான் என நான் மனதால் சரணடைந்தேன்
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
விழிகள் மூடி மௌனமாய் உன் இதயம் சாய்கிறேன்
துடிக்கும் உன் இதயம் ஒளியியல் தூங்கி போகிறேன்
உனது கண்கள் காட்டும் கருணை மனதில் தேக்கினேன்
மனது உந்தன் குரலுக்கு ஏங்கி விழிக்கிறேன்
குரலைக் கேட்க் ஏக்கத்தோடு உன்னையே தேடினேன்
உனது அழகு குரலும் எனக்குள் ஒலிக்க கேட்கிறேன்
இறைவா இனி நான் முழுதும் உனதாய் மாறுகிறேன்
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
உன் முக அன்பில் உருகிப் போகிறேன்
எந்தன் மனம் உன் நினைவைப் பாட கேட்கிறேன்
உன்னைக் கண்டப்பின் என்ன வேண்டுவேன்
என்ன வேண்டுவேன் யேசு தெய்வமே
உன்னை நான் பிரியா வரமாய் வருவாய்
அருள்புரிவாய்
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்