Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Kaatrilae
Nakul Abhyankar
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
காற்றிலே நேரம் மெல்ல பறக்க
வழி போக்கிலே ஆசை கூடி கிடக்க
வானம் விரியும் நமக்காகவே
காணா கனவெல்லாம் உருவாக்கவே
வளர்கிறதே வாழ்வின் பிறை
மனதினிலே நட்பின் நிறை
தடுக்கத்திலே என்னை அழை
வருவேன் பல நடை
விளையாடி விழுந்தே
பல பாடம் கூட தழும்பாகும்
விரைந்தோடி தழுவும்
பல நட்பாலே காயம் இதமாகும்
அடி மனதில் இனிக்கிறதே
நானும் நீயும் இணைந்தாலே
பிரியும் நம் வழி
எனினும் அன்பென்றும் நெஞ்சில் குறையாதே
கனவுகளின் காலத்திலே
கரம் கொடுத்த நண்பர்களே
யுகம் கடக்கும் விண்மீன் ஒளி
நம்மை போல் மின்மினி
நேற்று போலே இப்போது இல்லை இனி
காற்றும் ஏனோ திசை மாறுது
வேகம் முக்கி திக்காது
தடைகளை உடை வழி தனி
காற்றிலே நேரம் மெல்ல பறக்க
வழி போக்கிலே ஆசை கூடி கிடக்க
அரும்பு பகை முடிந்த கதை
பாதை இங்கே நிறைவாக
பிரிந்தும் நம் வழி
தொடரும் அன்பென்றும் நெஞ்சில் அலையாக
வளர்கிறதே வாழ்வின் பிறை
மனதினிலே நட்பின் நிறை
தடுக்கத்திலே என்னை அழை
வருவேன் பல நடை