Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Thaayundu Thantai
Gangai Amaran
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றோர் இல்லே
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு
ஊற்றார் இல்லே
நான் ஓரு பரதேசி அய்யய்யய்யா
நல்லோர் கால் தூசி அய்யய்யய்யா
எல்லோரும் என்னைத் தள்ள
நானாகச் சொல்லிக் கொள்ள
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே
பெற்றவள் பெற்றெடுத்து தெய்வத்தின் காலடியில்
போட்ட கதையைச் சொல்லவா
உற்றவர் குற்றங்களை எந்தன் மேல் கட்டி வைத்து
விட்ட கதையைச் சொல்லவா
அய்யா ஓர் துன்பம் வந்து
தெய்வத்திடம் போய் உரைத்தால்
கை தந்து காக்கும் அல்லவா
தெய்வமே துன்பம் தந்தால்
எங்கே சென்று போய் உரைப்போம்
நல்லோர்க்கு காலம் இல்லையா
எல்லாமும் இங்கே உண்டு உண்மை இல்லே
நானே சொல்கின்ற வாக்கில்
ஏதும் பொய்யே இல்லே
நானே சொல்கின்ற வாக்கில்
ஏதும் பொய்யே இல்லே இல்லே
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே
தூரத்துப் பச்சை கண்டு
இச்சையே பட்டதில்லை
மேலும் நான் என்ன சொல்லட்டும்
யாருக்கும் பிச்சை இட
பேருக்கும் செல்வம் இல்லை
நேரத்தை என்ன சொல்லட்டும்
அன்னையின் பாலை உண்டு ஆரீராரோ கேட்கவில்லை
அம்மம்மா என்ன கொடுமை
திண்ணையில் நான் வளர்ந்தும்
தெருவில் தர்மம் கேட்கவில்லை
மேலும் ஏன் இந்தச் சிறுமை
தெய்வங்கள் தந்த பிச்சை
பொய்யா பொய்யா
இங்கே பொய் ஒன்றே மெய்யாய் போச்சே
அய்யா அய்யா
பொய் ஒன்றே மெய்யாய் போச்சே
அய்யா அய்யய்யய்யா
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றோர் இல்லே
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றோர் இல்லே
நான் ஓரு பரதேசி அய்யய்யய்யா
நல்லோர் கால் தூசி அய்யய்யய்யா
எல்லோரும் என்னைத் தள்ள
நானாகச் சொல்லிக் கொள்ள
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு
உற்றோர் இல்லே
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு
உற்றோர் இல்லே