Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sirika Vechu
Vijay Jesudas feat. Ramya Behra
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ஜிம்பு ஜிக்கா ஜிக்கர ஜிக்கா
ஜிக்கர ஜிக்கா யக்கோ
ஜிம்பு ஜிக்கா ஜிக்கர ஜிக்கா
ஜிக்கர ஜிக்கா யக்கோ... கோ... கோ...
சிரிக்கவச்சி சிரிக்கவச்சி சிறகடிச்சி பறக்க வைக்க
கறுப்பு இராசா வந்திருக்கே முன்னாலே
நெனச்சி வச்ச கவலையெல்லாம் நிமிஷத்தில ஓடிப்போகும்
நெறுப்பு இராசா எதிர வந்து நின்னாலே
Butterfly நீ பறந்தா பட்ட மரம் பூக்குமே
ஆம்பளைங்க நகக்கண்ணும் அன்னாந்துப் பார்க்குமே
இந்திரன் சந்திரன் கைகட்டி உன்னிடம் சேவகம் புரிய வைக்கவா
Z'ல் தொடங்கி A'வில் முடிய english'a மாத்தவா
சிரிக்கவச்சி சிரிக்கவச்சி சிறகடிச்சி பறக்க வைக்க
கறுப்பு இராசா வந்திருக்கே முன்னாலே
காகத்தோட நெறத்தக் கொஞ்சம் மேகத்தோட நெறத்தக் கொஞ்சம்
கலந்து எடுத்துவந்து கண்களுக்கு மை தரவா...
வானத்த நிமிர்த்தி வச்சி வைகைத்தண்ணி நெறப்பிவச்சி
நீ குளிச்சி மகிழ ஒரு நீச்சல்குளம் அமைச்சிடவா
கண்ணத்தில் கைய வச்சி உட்காரவேக் கூடாது
வண்ணத்து பூச்சிப் போல வட்டமடி என்னோடு
காத்தாடி நான் தானே காத்து நீதான்
அடி ஆத்தாடி ஆணையிடு அப்படியே செஞ்சிடுவேன்
சிரிக்கவச்சி சிரிக்கவச்சி சிறகடிச்சி பறக்க வைக்க
கறுப்பு இராசா வந்திருக்கே முன்னாலே
நாரதரு இசையமைக்க நக்கீரன் பாட்டெழுத
பேரழகி உனைப்புகழந்து பின்னனி பாடட்டுமா... ஹா ஹா ஹா...
ஆலங்கட்டி எடுத்து வந்து அரண்மணை வடிவமைச்சி
நீ நடக்கும் பாதையெல்லாம் நட்சத்திரம் தெளிக்கட்டுமா
உன்ன நான் கட்டிக்கொல்ல என்ன தவம் செய்தேனோ...
மண்ணுமேல் இன்பம் எல்லாம் ஒன்னா சேர்ந்தா நீதானோ
நானாக நான் மாறி ஆடவாறேன்
தலக்காலு புரியாம தந்தனத்தோம் போடுவேன்
சிரிக்கவச்சி சிரிக்கவச்சி சிறகடிச்சி பறக்க வைக்க
கறுப்பு இராசா வந்திருக்கே முன்னாலே