Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Enna Nadakudhu
Ilaiyaraaja
Popularity · Low
+
🇱🇰 Tamil · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
என்ன நடக்குது சாமி
ஒன்னும் புரியல சாமி
என்ன நடக்குது சாமி
ஒன்னும் புரியல சாமி
பயணம் இருக்குது, பாத இல்லயே
பாத கெடச்சதும், பலனும் இல்லயே
காயம் தான் பட்டுரிச்சி
கண்ணீரும் சுட்டுரிச்சி
வலிக்கு மருந்தும் இல்ல
வேதன தீரவில்ல
என்ன நடக்குது சாமி
ஒன்னும் புரியல சாமி
சிறகினை விரித்தேன் ஆகாயத்தை காணவில்லை
ஆகாயம் இனி வெறும் கனவோ?
மண் மீது நடந்திட்டேன் சுவடினை தேடினேன்
பொருந்தாத பாதம் இது எனதா?
எதனை தேடி அலைகிறேன்?
எதனை தந்தாய் தவிக்கிறேன்?
கடக்கும் நொடிகளை வலியினில் உணர்ந்தேன்
தவிக்கும் மனதினை நீ தர நீ தர ஏற்கின்றேன்
விடியாத பொழுதுண்டோ?
விடியலை விடியலை கேட்கின்றேன்
துன்பம் பொது எனில்
யார் தோளில் யார் தான் சாய?
பயணம் இருக்குது, பாத இல்லயே
பாத கெடச்சதும், பலனும் இல்லயே
காயம் தான் பட்டுரிச்சி
கண்ணீரும் சுட்டுரிச்சி
வலிக்கு மருந்தும் இல்ல
வேதன தீரவில்ல
என்ன நடக்குது சாமி
ஒன்னும் புரியல சாமி
என்ன நடக்குது சாமி
ஒன்னும் புரியல சாமி