Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
En Kadhal Thee
Harris Jayaraj
Popularity · Low
+
Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
என் காதல் தீ
தீ வாசம் நீ
கண் பார்த்தோம் வா
கை சேர்ப்போம் வா
பல உயிர்கள் ஏறியும்
உடல்கள் மாறியும் பயணப்படுவது காதல்
காதல் சாதல்
காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்னே விந்தையடி?
அந்த சொர்க்கம் போக ரெண்டும் வேண்டும் கண்ணே உண்மையடி
காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்னே விந்தையடி?
அந்த சொர்க்கம் போக ரெண்டும் வேண்டுமடி
என் காதல் தீ
தீ வாசம் நீ
கண் பார்த்தோம் வா
கை சேர்ப்போம் வா
உடல்கள் இரண்டும் சேரும் முன்
உள்ளம் இரண்டும் சேருமே
உடலின் வழியே உயிரை தொடுவது காதலே
இதயம் இரண்டும் தூரம்தான்
இதழ்கள் நான்கும் அருகில்தான்
இதழ்கள் வழியே இதயம் தொடுவது காதலே
ஊசி போடும் ரெண்டு கண்களில் உயிரை குடித்தவள் நீ
உயரம் காட்டும் பூக்கள் இரண்டினில் உலகை உடைப்பவள் நீ
காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்னே விந்தையடி?
அந்த சொர்க்கம் போக ரெண்டும் வேண்டும் கண்ணே உண்மையடி
(காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்னே விந்தையடி?)
(அந்த சொர்க்கம் போக ரெண்டும் வேண்டுமடி)
உலகில் காதல் பழையது
உற்ற பொழுதே புதியது
எல்லா நிலத்தும் எல்லா பொழுதும் நிகழ்வது
உலகின் நெருப்பு காதலே
உயிரில் இருப்பு காதலே
உண்மை காதல் உலகைவிடவும் பெரியது
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தலில் குலுங்கும் பூவிதுவே
பாலை வெயிலிலும் கானல் வெளியிலும் படரும் நிழல் இதுவே
கண்டார் மயங்கும் வண்டார் மலரே நின்றோர் மொழி சொல்லடி
உன் பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது என்னே செழுமையடி
பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது என்னே செழுமையடி
அதை முத்தம் எடுக்க சித்தம் துடிக்குதடி
பெண் பாவாய் வா (பெண் பாவாய் வா)
கண் பாவாய் வா (கண் பாவாய் வா)
செங்கோளாய் வா (செங்கோளாய் வா)
செந்தேனாய் வா (செந்தேனாய் வா)